1. Home
  2. கோலிவுட்

திருமணம் ஆன புதுசு, மிருகமாக நடந்து கொண்ட பகத் பாசில்.. நஸ்ரியா கொடுத்த கடைசி வார்னிங்

திருமணம் ஆன புதுசு, மிருகமாக நடந்து கொண்ட பகத் பாசில்.. நஸ்ரியா கொடுத்த கடைசி வார்னிங்
கல்யாணமான புதிதில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட பகத் பாசிலை பற்றி வெளிப்படுத்திய நஸ்ரியா.

Actress Nazriya: தமிழ் சினிமாவில் செம க்யூட் நடிகையாக இருக்கக்கூடிய நஸ்ரியா 12 வயது வித்தியாசத்தில் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இவர்களுக்கு திருமணமானதிலிருந்து இப்போது வரை எந்தவித சண்டை சச்சரவும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, நஸ்ரியா தன்னுடைய கணவர் பகத் பாசில் திருமணமான புதிதில் மிருகத்தனமாக நடந்து கொண்டதை குறித்து பகிரங்கமாக பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. திருமணமான பிறகு நஸ்ரியா ஒரு சில படங்களில் மட்டுமே தலை காட்டுகிறார். ஆனால் பகத் பாசில் முன்பை விட இப்போதுதான் நல்ல படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகராக முன்னிலைப்படுத்துகிறார்.

அதிலும் விக்ரம் படத்தின் தொடர்ச்சியாக இப்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்திலும் வில்லனாக மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் பகத் பாசில் படத்தில் இருக்கும் வில்லனை போலவே வீட்டிலுல் மிருகத்தனமாக நடந்து கொள்வதாக நஸ்ரியா கூறுகிறார். கல்யாணம் ஆகி கணவருடன் ஒரே வீட்டில் இருக்கும்போது தான் பகத் பாசிலின் அனுதின நடவடிக்கைகள் நஸ்ரியாவிற்கு தெரிய வந்தது.

பகத் பாசில் ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததும் தனியாக ஒரு அறைக்குள் சென்று மிருகத்தனமாக கத்தி கூச்சல் போடுவார். அவர் போடும் சத்தம் வீட்டையே இரண்டாக்கும். விசாரித்து பார்த்ததில் பகத் பாசில் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன்னை அந்த கேரக்டராகவே நினைத்துக் கொண்டு மாறி விடுவார். அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தான் தனி அறைக்கு சென்று சத்தம் போட்டது தெரிய வந்தது.

உடனே இதைப் பற்றி நஸ்ரியா பகத் பாசிலை உட்கார வைத்து பேசி இருக்கிறார். வீட்டக்கு வெளியே சென்று விட்டு வந்த பிறகு செருப்பை எப்படி வாசலில் கலட்டி விட்டு வீட்டுக்குள் வருகிறோமோ, அதேபோல நீங்கள் படப்பிடிப்புக்கு சென்று விட்டு நடித்த பிறகு அந்த கேரக்டர்களை அப்படியே கழட்டி விட்டுட்டு வரணும்.

அப்படி இல்லை என்றால் உங்களை நான் மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். அதன் பிறகு தான் பகத் பாசில் இந்த பிரச்சினையிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இதைப் பற்றி நஸ்ரியாவே பேட்டி ஒன்றில் செய்தியாளர் செய்யாறு பாலுவிடம் தெரிவித்திருக்கிறார். இதை இப்போது செய்யாறு பாலு சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.