1. Home
  2. கோலிவுட்

ரிசல்ட்க்குப்பின் வாழைப்பழத்தில் ஊசி ஏத்திய நெட்பிளிக்ஸ்.. அந்தரத்தில் தொங்கும் கமலின் வியாபார தந்திரம்

ரிசல்ட்க்குப்பின் வாழைப்பழத்தில் ஊசி ஏத்திய நெட்பிளிக்ஸ்.. அந்தரத்தில் தொங்கும் கமலின் வியாபார தந்திரம்

தக்லைஃப் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 150 கோடிகள் கொடுத்து வாங்கியது. சமீபகாலமாக OTT நிறுவனங்கள் இவ்வளவு பெருந்தொகை கொடுத்து எந்த படத்தையும் வாங்குவதில்லை. ஆனால் இந்த படத்தை இவ்வளவு பெரும் தொகை கொடுத்து வாங்கியதற்கு காரணம் இருக்கிறது.

மணிரத்தினம், கமல், சிம்பு, திரிஷா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளம். 36 வருடங்களுக்குப் பின் கமலுடன் இணைந்த மணிரத்தினம், எல்லாவற்றிற்கும் மேலாக இந்த படத்திற்கு பிரமோஷன் கொடுத்த பூஸ்ட், என்பதை எல்லாம் பார்த்து இந்த படத்தை நெட்பிளிக்ஸ் 150 கோடிகள் கொடுத்து வாங்கியது.

இதன் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவி 60 கோடிகள் கொடுத்து வாங்கியது. இப்படி படம் ரிலீசுக்கு முன்பே ஒரு கணிசமான தொகையை லாபமாக பார்த்தது தக்லைஃப் டீம். ஆனால் படம் ரிலீஸ் ஆன பின்பு எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை. எல்லா பக்கமும் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து டல்லாகிவிட்டது.

கமலும் இந்த படத்தை பெரிய அளவில் பிசினஸ் செய்து விட வேண்டும் என புது யுக்திகள் பல கொண்டு வந்தார். அதாவது படம் ரிலீஸ் ஆன பிறகு 8 வாரங்கள் கழித்து தான் அதை OTTஇல் வெளியிட வேண்டும். நான்கு வாரங்களாக இருந்ததை அதிகரித்து இந்த படத்தை நம்பி பல திட்டங்களை வகுத்தார்.

ஒரு கட்டத்தில் படம் கொடுத்த மோசமான வசூலால் நெட்பிளிக்ஸ் ஆடிப்போனது. இவ்வளவு பெருந்தொகையை கொடுத்து வாங்கியும் பிரயோஜனம் இல்லை, நான்கு வாரங்களில் நாங்கள் வெளியிடப் போகிறோம் அப்படி எட்டு வாரங்கள் கழித்துதான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் 30 கோடிகள் பணம் ரிட்டன் தர வேண்டும் என கமலிடம் மல்லு கட்டுகிறது.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.