மீண்டும் நடுங்கிய கை.. திமிரு புடிச்ச விஷால், கடுப்பில் நெட்டிசன்கள்

Vishal: விஷால் எது பேசினாலும் அது சர்ச்சை தான். ஆனால் மதகஜராஜா ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வில் அவரை பார்த்த எல்லோரும் பதறித்தான் போனோம்.

உச்சபட்ச காய்ச்சலோடு கை நடுக்கத்தோடு மைக்கை பிடித்து பேசினார். அவருக்கு என்ன ஆச்சு என பதறிப்போன ரசிகர்கள் ஆண்டவரிடம் அவசர வேண்டுதலையும் வைத்தனர்.

அதேபோல் மக்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு பட வெற்றி விழாவில் பேசிய அவர் தனக்காக பதறியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தேவையில்லாமல் வதந்தியை பரப்பிய மீடியாக்களையும் விளாசினார். அதையடுத்து கடந்த சில நாட்களாக அவர் பொதுவெளியில் அதிகம் தென்பட்டு வருகிறார்.

திமிரு புடிச்ச விஷால்

அதன்படி இன்று சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு அவர் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அதன் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

அப்போது மைக்கை வாங்கி மீண்டும் கை நடுக்கத்தோடு பேசினார். அதற்கு அவர் சொன்ன காரணம் தான் இப்போது நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

நான் இனிமே இப்படித்தான் மைக்கை புடிச்சு ஆட்டிக்கிட்டே பேசுவேன். ஏன்னா நாலு நிமிஷத்துல இந்த உலகத்துக்கே தெரிய வச்சிட்டீங்க.

அதே மாதிரி என் மேல யாரு உண்மையா அன்பு வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுகிட்டேன் என மீடியாவை நாசுக்காக தாக்கி பேசினார். ஆனால் எதற்காக மக்களை கிண்டல் செய்ற மாதிரி பேசணும்.

உங்களுக்கு உடம்புக்கு ஏதோ ஆச்சுன்னு பதறிப் போய் வேண்டிக்கிட்டவங்கள இப்படித்தான் கிண்டல் பண்றதா. திமிரு புடிச்ச விஷால் நல்ல நடிகன்னு நிரூபிச்சிட்டீங்க.

உங்களுக்காக வேண்டிக்கிட்ட மக்களை பத்தி யோசிக்கலயா என இணையவாசிகள் அவருடைய இந்த பேட்டியை பார்த்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

மேலும் அவர் மீண்டும் சுந்தர் சியுடன் இணையப் போகிறேன் விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment