1. Home
  2. கோலிவுட்

நம்பர் 1 இடத்தை பிடித்த கோட்.. சம்பவம் செய்யும் விஜய்

நம்பர் 1 இடத்தை பிடித்த கோட்.. சம்பவம் செய்யும் விஜய்

Goat : விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான பாடல் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படம் ரசிகர்கள் இடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. மேலும் 430 கோடி வசூல் செய்திருந்தது.

கோட் படம் நஷ்டத்தை கொடுக்காமல் ஓரளவு நல்ல லாபத்தை தான் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுத்தது. ஆனால் படம் வெளியான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கோட் படம் வெளியாகிவிட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

இந்த சூழலில் தியேட்டரில் வரவேற்பு பெறாத பல படங்கள் ஓடிடியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. விஜய் சேதுபதியின் மகாராஜா படம் கூட ஓடிடியில் பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது கோட் படமும் அதிகப்பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.

நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கோட்

நம்பர் 1 இடத்தை பிடித்த கோட்.. சம்பவம் செய்யும் விஜய்
goat

இதை நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதாவது செப்டம்பர் 30ல் இருந்து அக்டோபர் 6 ஆம் தேதி வரை நெட்பிளிக்ஸின் டாப் 10 படங்களில் முதலிடத்தில் கோட் படம் இருந்துள்ளது. இதன் மூலம் ஓடிடியிலும் விஜய் சம்பவம் செய்திருக்கிறார்.

கோட் படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனத்தை காட்டிலும் நெட்பிளிக்ஸுக்கு இப்போது நல்ல லாபம் கிடைத்துள்ளது. மேலும் தியேட்டரில் கோட் அலை ஓய்ந்தாலும் ஓடிடியில் இவ்வளவு வரவேற்பு பெறுவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தை காட்டிலும் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் காத்திருக்கிறது. வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.