விஷ்ணு விஷாலை பிடித்து ஆட்டும் நம்பர் சென்டிமென்ட்.. முதல் மனைவியை கழட்டி விட்டது இதுக்கு தானா

விஷ்ணு விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க காமெடி அலப்பறையாக இருக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இந்த ஜோடி தற்போது ரசிகர்களை ஈர்த்துள்ளதால் படத்தின் வசூலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.

அந்த வகையில் பட குழு தற்போது இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். ஒரு தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றுள்ள விஷ்ணு விஷால் இந்த படம் குறித்து பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் அவர் சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு லக்கியான நம்பர் என்ன என்பது பற்றி சுவாரசியமாக தெரிவித்துள்ளார்.

அதாவது அவருக்கு இரண்டு என்ற நம்பர் தான் ரொம்பவும் லக்கியாம். அதனால் தான் டிசம்பர் இரண்டாம் தேதி கட்டா குஸ்தி திரைப்படத்தை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதேபோன்று அவருடைய பைக் உள்ளிட்ட வாகனங்களின் நம்பரும் அவருக்குப் பிடித்த இரண்டாம் நம்பர் தானாம். அது மட்டுமல்லாமல் எல்லா விஷயத்திலும் அவர் இப்படி ஒரு சென்டிமென்டை பார்ப்பாராம்.

மேலும் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்த வெண்ணிலா பட குழு திரைப்படம் கூட இரண்டாம் தேதி தான் பூஜை போடப்பட்டதாம். அதேபோன்று அந்த படத்தின் வெளியீடு, படத்திற்காக வாங்கிய அட்வான்ஸ் என எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் இரண்டு என்றுதான் வருமாம். இப்படி ஒரு சென்டிமென்ட் எனக்கு இருக்கிறது. இது கேட்பதற்கு கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும் இப்படி ஒரு சென்டிமென்டை என்னால் விட முடியவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

அவருடைய இந்த பேச்சு சில விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது விஷ்ணு விஷால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் உங்களுடைய சென்டிமென்ட்டால் தான் முதல் மனைவியை கழட்டி விட்டீர்களா என அவருடைய லக்கி நம்பர் குறித்து கேலி செய்து வருகின்றனர்.

தற்போது கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்திற்கும் மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. சமீபத்தில் இந்த பட பூஜை நடைபெற்ற நிலையில் அடுத்த வருடம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.