ரெட்ரோ கலெக்சன் எவ்வளவு தெரியுமா.? தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்

Suriya : மே ஒன்றாம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் ரெட்ரோ. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். முதல் நாள் சற்று கலமையான விமர்சனங்களை பெற்றாலும் அடுத்தடுத்த நாள் நல்ல வசூலை பெற்றது.

அதாவது வளர்ப்பு தந்தையால் பாரி ரவுடியாக மாறுகிறார். ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் திருமண வாழ்க்கையில் இறங்கும் போது ரவுடித்தனத்தை மொத்தமாக விட்டு விட நினைக்கிறார். ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக வளர்ப்பு தந்தை இருக்கிறார்.

ஆகையால் வேறு வழியில்லாமல் தந்தையின் கையை வெட்டும் சூழ்நிலை கதாநாயகனுக்கு ஏற்படுகிறது. இதனால் ஜெயிலுக்கு சென்ற பாரி மீண்டும் வந்து காதலியை கரம் பிடிக்கிறாரா, தந்தையின் திட்டத்தை தவிடு பொடி ஆகிறாரா என்பது தான் ரெட்ரோ கதை.

ரெட்ரோ கலெக்ஷனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

retro
retro

இதற்கு முந்தைய சூர்யாவின் கங்குவா படம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு படுமோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு எடுக்கும் படி ரெட்ரோ படம் அமைந்திருக்கிறது.

இந்நிலையில் உலக அளவில் ரெட்ரோ படம் 104 கோடி வசூலை அள்ளி இருக்கிறது. மேலும் அடுத்த வாரம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் வெளியாகவில்லை.

இதனால் அடுத்த வாரமும் டூரிஸ்ட் ஃபேமிலி மற்றும் ரெட்ரோ படங்கள் தான் வசூலை அள்ள உள்ளது. சூர்யாவுக்கு ரெட்ரோ பட வெற்றியால் அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.