Oru Nodi: எப்போதுமே ஹாரர் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த நாடியை பிடித்து உருவான படம் தான் ஒரு நொடி.

கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நொடிக்கு நொடி திருப்பமும் அடுத்து என்ன என்று கடைசி வரை ரசிகர்களை எதிர்பார்ப்புடன் வைத்திருந்தது இப்படம்.
மணிவர்மன் இயக்கத்தில் தமன், எம் எஸ் பாஸ்கர் கூட்டணியின் அடுத்த படமான ஜென்ம நட்சத்திரம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.
அடுத்த மிரட்டலுக்கு தயாரான ஒரு நொடி டீம்
இதன் போஸ்டரே மிகவும் மிரட்டலாக இருக்கிறது. ஒரு நொடி படம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் முறையில் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஜென்ம நட்சத்திரம் போஸ்டர் ஹாரர் முறையில் இருக்கிறது. அதில் ஹீரோ ஹீரோயினை அணைத்தபடி இருக்க பின்புறம் தலைவிரி கோலமாக ஒரு கருப்பு உருவம் இருப்பது போல் போஸ்டர் இருக்கிறது.
இதிலிருந்து படம் நிச்சயம் திரில்லர் வகையறா என தெரிகிறது. ஒரு நொடி படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல் இப்படத்திற்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேபோல் ஏற்கனவே தமிழில் ஜென்ம நட்சத்திரம் என்ற பெயரில் படம் வெளிவந்து மிரட்டியது குறிப்பிடத்தக்கது. அதை 90ஸ் கிட்ஸ் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது