1. Home
  2. கோலிவுட்

18 படங்களில் 10 படம் சூப்பர் ஹிட்.. மகன் பிரபுவை விட சிவாஜியின் லக்கியான ஃப்ரெண்ட்

18 படங்களில் 10 படம் சூப்பர் ஹிட்.. மகன் பிரபுவை விட சிவாஜியின் லக்கியான ஃப்ரெண்ட்
சிவாஜி-பிரபு காம்போவை விட, நடிகர் திலகத்துடன் அதிக முறை இணைந்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நவரச திலகம்.

250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்து தமிழ் திரை உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகர் சிவாஜி கணேசன். இவருடைய பல படங்கள் திரையரங்குகளில் 175 நாட்கள் வரை ஓடி வசூல் சாதனை படைத்தது.

இவருக்குப் பின் சிவாஜியின் மகன் பிரபுவும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அப்பா, மகன் என சிவாஜிகணேசனும் பிரபுவும் நிறைய படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். --ஆனால் இவர்களையும் தாண்டி, அவருடன் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அதிகமான படங்களில்  நடித்துள்ளார். 

இவர்கள் இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 18 படங்களில் சேர்ந்து நடித்துள்ளார்கள். 18 படங்களில் பத்து படங்கள் சூப்பர் ஹிட். அதனாலேயே இவர்கள் இருவரது காம்பினேஷன் நன்றாக இருக்கிறது என்று தயாரிப்பாளர்கள் இவர்களை அணுகி இருக்கிறார்கள்.

நவரச நாயகன் கார்த்திக்கின் அப்பா முத்துராமன். நவரச திலகம் என அழைக்கப்பட்ட இவர் நூறு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோர் உச்ச நட்சத்திரங்களாக இருந்த அதே காலகட்டத்தில் தான் முத்துராமனும் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர்.

மேலும் முத்துராமன் தான் சிவாஜியுடன் அதிக படங்களில்  நடித்திருக்கிறார். அதிலும் 1965 ஆம் ஆண்டு வெளியான பக்தி படமான திருவிளையாடல் புராணம் என்ற படத்தில் முதல் முதலாக சிவாஜி மற்றும் முத்துராமன் இருவரும் சேர்ந்து நடித்திருப்பார்கள்.

அதன்பின் வெளியான கர்ணன், சொர்க்கம், ராஜராஜ சோழன், படிக்காத மேதை, ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள், வைர நெஞ்சம், தர்மம் வெல்லும் உள்ளிட்ட படங்களில் சிவாஜி மற்றும் முத்துராமன் இருவரின் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகி சூப்பர் ஹிட் ஆனது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.