1. Home
  2. கோலிவுட்

யூடியூப் சுதாகரின் திருமண புகைப்படங்கள்.. சிங்கிளாக பரிதாபமாக வந்து வாழ்த்திய கோபி

யூடியூப் சுதாகரின் திருமண புகைப்படங்கள்.. சிங்கிளாக பரிதாபமாக வந்து வாழ்த்திய கோபி

தற்போது சமீபகாலமாக ரசிகர்கள் தொலைக்காட்சியை காட்டிலும் யூடியூப் வீடியோக்களை அதிகமாக பார்க்கின்றனர். இதனால் திரைப்பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை தற்போது யூடியூபில் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களால் சம்பாதிக்கவும் முடிகிறது. அப்படி யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் தான் கோபி, சுதாகர். இவர்களது வீடியோக்கள் திடீரென இணையத்தில் வைரலாக பரவியது. ஆரம்பத்தில் கோபி, சுதாகர் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து உள்ளனர். எப்படியாவது சினிமாவில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் தோல்வியை சந்தித்தனர் அதன் பிறகு யூடியூப் சேனலில் இவர்கள் செய்த பரிதாபங்கள் என்ற வீடியோக்களின் மூலம் மெட்ராஸ் சென்ட்ரல் என்ற சேனல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியது. கோபி மற்றும் சுதாகர் இருவருமே கான்செப்ட்டை எழுதி, இயக்கி, நடிப்பார்கள். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் தனித்தனியாக வெப் சீரிஸில் நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்க ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் சில காட்சிகளில் நடித்தனர். அதைத் தொடர்ந்து சோம்பி என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இருவரும் நடித்தனர். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான உரியடி 2 படத்தில் சுதாகர் நடித்துள்ளார். யூடியூப் சுதாகரின் திருமண புகைப்படங்கள்.. சிங்கிளாக பரிதாபமாக வந்து வாழ்த்திய கோபி Parithabangal-sudhakar-marriage-1 சுதாகருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் மார்ச் 13 ஆம் தேதி சுதாகருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணத்தில் நடைபெறும் சில சம்பிரதாயங்கள் மற்றும் விளையாட்டுகள் போன்ற நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. யூடியூப் சுதாகரின் திருமண புகைப்படங்கள்.. சிங்கிளாக பரிதாபமாக வந்து வாழ்த்திய கோபி Parithabangal-sudhakar-marriage-2 அந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மணமக்கள் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். சுதாகரின் நெருங்கிய நண்பர் கோபி மற்றும் யூடியூப் வட்டாரத்தை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.