இயக்குனர்,நடிகர்,வசனகர்த்த என பன்முகத்தன்மை கொண்ட நடிகர் பார்த்திபன், எப்போதும் புதுமையான கதையையும், தான் இயக்கும் படங்களில் தொழில்நுட்பத்தையும் உலக தரத்தில் எடுப்பதில் வல்லவர். உதாரணமாக இவர் இயக்கி, நடித்து இந்தாண்டு வெளியான இரவின் நிழல் திரைப்படம் உலகிலேயே முதல் ஒன் சிங்கள் ஷாட் திரைப்படமாக எடுக்கப்பட்டு சாதனை படைத்தார்.
தொடர்ந்து இதுபோன்று தன் திறமைகளை தமிழ் சினிமாவில் கொண்டு வர பல முயற்சிகளையும் செய்து வருகிறார் பார்த்திபன். 1989 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த புதிய பாதை திரைப்படம் சக்கை போடு போட்டு சிறந்த திரைபடம் என்ற தேசிய விருதினையும் பெற்றது. அதன் பின் பார்த்திபன் பல படங்களில் அவரே இயக்கி ஹீரோவாகவும் நடித்து அசத்தியிருந்தார்.
இதனிடையே பல வருடங்களுக்கு பிறகு பார்த்திபன் ஒத்த செருப்பு படத்தை இயக்கி தானே நடித்த நிலையில் தேசிய விருதினை இப்படத்திற்காக பெற்றார். இந்நிலையில் இப்போது வரை பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும் எண்ணத்தில் பார்த்திபன் இல்லாமல் தானே இயக்கி நடித்து ஹிட் கொடுத்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் பார்த்திபன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரை வைத்து ஒரு வித்யாசமான சினிமாவை எடுக்க ஆசைப்பட்டதாக தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் ஜெகன் விஜயா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆசியாவின் முதல் ஸ்பிலிட் ஸ்கீரீன் திரைப்படமான பிகினிங் திரைப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியானது.
இப்படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், 96 பட புகழ் கௌரி கிஷன், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பார்த்திபன், அப்படத்தை பற்றி பேசினார்.
அப்போது 2011 ஆம் ஆண்டின் போது நடிகர் தனுஷின் நடிப்பில் தற்போது பிகினிங் திரைப்படம் போலவே ஸ்பிலிட் ஸ்கீரீன் படத்தை எடுக்க தீட்டமிட்டாராம் பார்த்திபன்.ஆனால் அதற்கு தனுஷ் அந்த சமயத்தில் ஒப்புக்கொள்ளாததால், அதை தான் கைவிட்டதாகவும் தனக்கு அப்போதே இதுபோன்ற யோசனைகள் வந்ததாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தற்போது அப்படி நான் சாதனை புரிய வேண்டும் என்று நினைத்த படத்தை இயக்குனர் ஜெகன் இயக்கி சாதனை படைத்துள்ளார் என நெகிழ்ந்து பேசினார் பார்த்திபன்.