மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையாடி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படத்திற்கும் கிடைக்காத அளவுக்கு மாபெரும் வரவேற்பு பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்து வருகிறது.
இப்படத்தை எம்ஜிஆர் காலத்தில் இருந்து எடுக்க பலர் முற்பட்டனர். ஆரம்பத்தில் எம்ஜிஆர், அதன் பின்பு கமல் என ஒவ்வொருவராக இப்படத்தை எடுக்க நினைத்து கைவிட்டனர். மணிரத்தினமும் இப்படத்தை நினைத்த உடனே எடுத்த முடிக்கவில்லை. இவர் 2011 இல் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே பாகமாக எடுக்க திட்டம் வைத்திருந்தார்.
அதற்கான நடிகர், நடிகைகளையும் தேர்வு செய்து வைத்திருந்தார். அதாவது ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தயத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய், அருள்மொழி வர்மனாக மகேஷ்பாபு, பெரிய பழுவேட்டையர் கதாபாத்திரத்தில் சத்யராஜ், நந்தினியாக அனுஷ்கா ஆகியோரை மணிரத்தினம் தேர்வு செய்து இருந்தார்.
ஆனால் அந்த சமயத்தில் விக்ரம் கரிகாலன் என்ற படத்தில் நடிக்க சென்று விட்டார். இதனால் அப்போது பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் எடுக்க முடியாமல் கைவிட்டார். கரிகாலன் படம் ஒரு சில காரணங்களினால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ஒருவேளை விக்ரம் மட்டும் அன்று இப்படத்தில் நடிக்க தயாராக இருந்தால் 11 வருடங்களுக்கு முன்பே பொன்னியின் செல்வன் படம் விஜய், மகேஷ் பாபு, சத்யராஜ் போன்றோரை வைத்து எடுக்கப்பட்டிருக்கும். காலதாமதமும் சில சமயத்தில் நன்மையாகும் என்பது போல பொன்னியின் செல்வன் படம் இப்போது வெளியானாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதாவது இப்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு படத்தின் காட்சிகள் தத்ரூபமாக உருவாகியுள்ளது. 11 வருடங்களுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்ப இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான். மேலும் பல வல்லுனர்களும் இப்படத்தில் இணைந்து படத்தை திறம்பட கொடுத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.