பொன்னியின் செல்வனால் மணிரத்தினத்தின் ஷேர் மற்றும் சம்பளம்.. அடேங்கப்பா! தளபதி விஜயை விட ஜாஸ்தியா இருக்கே

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இப்படம் மொத்தமாக 240 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தயாரித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமுக்கு 10 கோடி, வந்தியதேவனாக நடித்த கார்த்திக்கு 8 கோடி, அருள்மொழி வர்மன் ஆக நடித்த ஜெயம் ரவிக்கு 8 கோடி, மேலும் ஐஸ்வர்யா ராய் நந்தினி ஆக நடித்ததற்கு 8 கோடியும் கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து குந்தவையாக நடித்த த்ரிஷாவுக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்தில் இசையமைத்ததற்காக ஏ ஆர் ரகுமானுக்கு 4 கோடி சம்பளம் கொடுத்தனர். மேலும் இதர நடிகர், நடிகைகளுக்கு 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் மொத்தமாக 49.50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் 95 கோடி வசூல் செய்திருந்தது. மேலும் ஆந்திராவில் 11 கோடி, கேரளாவில் 5.5 கோடி, கர்நாடகாவில் 3.5 கோடி மற்றும் ஹிந்தியில் 13 கோடி வசூல் செய்திருந்தது.

எல்லா மொழிகளிலும் மொத்தமாக பொன்னியின் செல்வன் படம் 429. 75 கோடி வசூல் செய்தது. இந்த படத்தில் எல்லா ரைட்ஸுக்கும் சேர்த்து 189.75 போடி லாபம் கிடைத்தது. இப்படத்தின் பட்ஜெட் ஆன 240 கோடியில் 60 கோடியை மணிரத்தினம் இயக்குனராக இருந்ததற்காக சம்பளமாக பெற்றுள்ளார்.

மேலும் படத்தின் லாபத்தில் ஒரு கோடியில் 30 சதவீதம் ஷேர் வைத்துக் கொண்டாலே 60 கோடி மணிரத்தினத்திற்கு கிடைத்து உள்ளது. மொத்தமாக பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்தினத்திற்கு 120 கோடி கிடைத்துள்ளது. தளபதி விஜயை விட மணிரத்தினம் இப்படத்திற்கு அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளார்.

அதாவது வாரிசு படத்தில் விஜயின் சம்பளம் 118 கோடி. தற்போது அதை விட 2 கோடி அதிகமாக மணிரத்னம் பெற்றுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் லைக்கா நிறுவனத்திற்கு 140 கோடி லாபம் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. அந்தப் படம் ஆயிரம் கோடி வசூல் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →