களை கட்டும் சோழர்களின் வரலாறு.. பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

பல்வேறு ஜாம்பவான்களும் முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் நாவல் தற்போது மணிரத்னத்தால் சாத்தியமாகி இருக்கிறது. சோழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது.

ps2-review
ps2-review

அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இன்று மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் பிரமோஷன் பயங்கரமாக நடைபெற்று வந்த நிலையில் படத்தில் நடித்திருந்த நட்சத்திர பட்டாளங்களும் தங்கள் பங்குக்கு விளம்பரம் செய்தனர்.

ponniyin-selvan-2
ponniyin-selvan-2

அந்த வகையில் தற்போது படத்தின் முதல் காட்சியை பார்த்த பலரும் பிரம்மித்து போய் தங்கள் கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். அதில் மணிரத்னம் இந்திய சினிமாவை மீண்டும் ஒரு முறை பெருமைப்படுத்தி இருக்கிறார் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ps2-movie-review
ps2-movie-review

அதிலும் முந்தைய பாகத்தில் இருந்த சஸ்பென்ஸ்கள் அனைத்தும் இந்த பாகத்தில் அழகாய் தீர்த்து வைக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு நட்சத்திரங்களின் நடிப்பும் குறை சொல்ல முடியாத அளவுக்கு இருப்பதாகவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

ponniyin-selvan-2
ponniyin-selvan-2

மேலும் ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினி சந்திக்கும் அந்த காட்சி நிச்சயம் வேற லெவல் என ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து ஏ ஆர் ரகுமானின் இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தியேட்டர்களில் இந்த சோழர்களின் வரலாறு திருவிழா போல் களை கட்டி இருக்கிறது.

ponniyin-selvan2-review
ponniyin-selvan2-review

படத்தைப் பார்த்த அனைவரும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் வகையில் இருப்பதாக கூறுவது படத்தின் வசூலுக்கான முன்னேற்றமாகவும் இருக்கிறது. அதன்படி இந்த இரண்டாம் பாகமும் வசூலில் சாதனை புரியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ponniyin-selvan2-movie
ponniyin-selvan2-movie