1. Home
  2. கோலிவுட்

ரெண்டு லட்டும் எனக்கு தான், விக்ரம் போட்ட கொக்கி.. ப்ளேபாய் மூடில் சியான் 62

ரெண்டு லட்டும் எனக்கு தான், விக்ரம் போட்ட கொக்கி.. ப்ளேபாய் மூடில் சியான் 62

Actor Vikram: இந்த மாதம் சியான் மாதம் என ரசிகர்கள் அலப்பறை கொடுத்து வருகின்றனர். ஏனென்றால் விக்ரம் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

அதை முன்னிட்டு அவருடைய தங்கலான், சியான் 62 படங்களின் அப்டேட்டுகள் வெளிவர இருக்கிறது. அதில் தங்கலான் வெளியீட்டு தேதிதான் மிக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மேலும் சியான் 62 அப்டேட்டும் இன்று வெளிவர இருக்கிறது. அதன்படி சித்தா பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ள விக்ரம் இப்படத்தில் ரகளையான ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

தங்கலான் படத்தில் உடம்பை வருத்தி நடித்த அவர் இந்த படத்தில் ஜாலி மூடுக்கு மாறியுள்ளார். வீடியோ மூலம் இதன் அறிவிப்பு வெளிவந்த போதே ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

விக்ரமுடன் இணைந்த 2 ஹீரோயின்கள்

அதில் தற்போது மற்றொரு விஷயமும் இணைந்து இருக்கிறது. அதாவது இப்படத்தில் விக்ரமுடன் இரண்டு ஹீரோயின்கள் இணைந்துள்ளனர்.

அந்த வகையில் துஷாரா விஜயன் இதில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போது தலைவரின் வேட்டையன் தனுஷின் ராயன் ஆகிய படங்களில் இவர் நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் விக்ரமுடன் அவர் இணைந்திருப்பது ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்றொரு நாயகியாக நிமிஷா சஜயன் நடிக்கவும் பேசப்பட்டு வருகிறது.

இவர்கள் இருவருமே படத்தில் இருக்கிறார்களா அல்லது ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படுவாரா என்பது விரைவில் முடிவாகி விடும். ஆனால் நடிப்பில் திறமையான இவர்கள் இருவருமே படத்தில் இணையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.