விஜய் படத்தில் நடிக்கும்போது பிரபலம் ஒருவரை தளபதி அசிங்கப்படுத்தியிருந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளது விஜய் ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய். விஜய் தன்னுடைய வளர்ச்சி காலகட்டங்களில் கொஞ்சம் கெத்து காட்டியதாக பலரும் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். விஜய் மட்டுமல்ல, இப்போது அமைதியாக இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் அப்போது கொஞ்சம் கெத்துக் காட்டியுள்ளனர்.
அந்த வகையில் விஜய் தன்னுடைய கேரியரின் உச்சகட்ட வளர்ச்சியில் வளர்ந்து கொண்டிருக்கும்போது நடித்த வெளிவந்த படம்தான் போக்கிரி. இந்த படத்தில் விஜய்க்கு மேலதிகாரியாக நெப்போலியன் நடித்திருந்தார்.
போக்கிரி படத்தின் படப்பிடிப்பின்போது நெப்போலியன் தன்னுடைய உறவினர்களை கூட்டிச்சென்று விஜய்யுடன் போட்டோ எடுக்க ஆசைப்பட்டதாகவும், அதற்கு விஜய், சார் உங்களுக்கு மேனர்ஸ் தெரியாதா? என கேட்டு அசிங்கப்படுத்தியதாகவும் அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவு வெளியாகி செம வைரலானது. ஆனால் அதே பேட்டியில் விஜய் என்னை அசிங்கப்படுத்தியிருந்தாலும் பரவாயில்லை, அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என குறிப்பிட்டிருப்பார் நெப்போலியன்.
என்னதான் ஒரு மனிதன் தன்னை அசிங்கப்படுத்தியிருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாய்ப்பு கிடைத்தால் இணைந்து நடிக்க தயார் என்று பெருந்தன்மையுடன் நெப்போலியன் கூறியுள்ளது விஜய் ரசிகர்களுக்கு சங்கடத்தை கொடுத்துள்ளதாம். மேலும் ஒரு நிமிடம் விஜய் பொறுமையாக இருந்திருந்தால் இன்று இது ஒரு பேசுபொருளாக மாறியிருக்காது எனவும் வருத்தப்படுகின்றனர்.
