பிடிச்சா போங்க.! தான் அனுபவித்த அட்ஜஸ்ட்மென்ட்டை புட்டு புட்டு வைத்த போர் தொழில் நடிகை

Por Thozhil Movie Actress: சினிமாவில் சமீப காலமாகவே நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த அட்ஜஸ்மென்டை பற்றி வெளிப்படையாக பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக இப்போது போர் தொழில் படத்தின் நடிகை லிசா சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் கடந்த மாதம் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் போர் தொழில். இதில் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், லிசா, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். சைக்கோ திரில்லராக உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் தாறுமாறாக அள்ளியது.

இந்த படத்தில் வெறும் இரண்டே நிமிடம் வந்தாலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லிசாவின் நடிப்பை பலரும் பாராட்டுகின்றனர். அதிலும் இவருடைய கண்ணுக்குழி அழகால்தான் அந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததாம். இதனால் இன்ஸ்டாகிராமில் இவரை டிம்பிள் குயின், டிம்பிள் சீதா என்றெல்லாம் வர்ணிக்கின்றனர்.

இந்நிலையில் லிசா ஐந்து வருடத்திற்கு முன்பே சுந்தர்.சி படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்ததாம். அப்போது அவருடைய குடும்பத்தில் பணத்தேவை இருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். அதனால் ஆண்கள் பெரும்பாலும் செய்யக்கூடிய பிஆர் வேலையை பார்த்து வந்துள்ளார். அந்த வேலையின் முலம் தான் அவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல சினிமாவில் பிஆர் தான் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைப்பதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால் இதுவரை அந்த மாதிரியான விஷயம் எதுவும் என்னிடம் வரவே இல்லை. அதற்காக அட்ஜஸ்ட்மென்ட் என்பது சினிமாவில் இல்லை என்று சொல்லமாட்டேன் என்று லிசா தெரிவித்துள்ளார்.

ஒரு படத்தின் வாய்ப்பு வேண்டும் என்றால் அதற்காக எல்லாத்துக்கும் ஓகே என்று சொன்னால் தான் அது நடக்கும். ஒரு வேலை அந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு முடியாது என சொல்லிவிட்டால் யாரும் நம் பக்கம் கூட வர மாட்டார்கள். நீங்கள் மறுத்தால் மிஞ்சிப் போனால் உங்கள் வாய்ப்பு மட்டுமே போகும். அதற்காக வருத்தப்படக்கூடாது.

அடுத்த படத்திற்கு முயற்சி செய்து கொண்டே இருந்தால், நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். பிடிக்காமல் ஒரு விஷயத்தை செய்து விட்டு அதன் பின் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகுவதுதான் கொடுமையாக இருக்கும். ஆகையால் பிடிக்கவில்லை என்றால் அட்ஜஸ்ட்மென்ட்டை தவிப்பது நல்லது. உங்களுக்கு பிடிச்சா போங்க பிடிக்கலைன்னா பேசாம இருந்துக்கோங்க என்று லிசா சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →