கர்ப்பமாக இருக்கும் வனிதா விஜயகுமார்.. டெலிவரி தேதி எப்போது தெரியுமா.?

Vanitha Vijayakumar : சர்ச்சைக்கு பேர் போனவர் தான் வனிதா விஜயகுமார். இவரது சொந்த வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி இருக்கிறது. குறிப்பாக அவரது திருமண வாழ்க்கை தான் பேசு பொருளாக மாறியது.

அவரைப் பற்றி என்ன நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தாலும் வனிதா எப்போதுமே பாசிட்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வாறு தனது அடுத்த இலக்கை நோக்கி போய்க்கொண்டிருக்கிறார். இவர் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருந்தார்.

இப்போது படங்களில் நடித்து வரும் வனிதா மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படத்தை வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா தயாரித்திருக்கிறார்.

வனிதா விஜயகுமார் வெளியிட்டுள்ள போஸ்டர்

vanitha-vijayakumar
vanitha-vijayakumar

இப்படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதாவது மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் வெளியீட்டு விழா வருகின்ற 25ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

மேலும் அந்த போஸ்டரில் நிறைமாத கர்ப்பிணியாக வனிதா இருக்கிறார். அவருக்கு ராபர்ட் மாஸ்டர் முத்தம் கொடுக்கும்படி புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இதை குறிப்பிட்டு டெலிவரி தேதி ஜூன் என்று வனிதா போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வித்தியாசமான போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ஸ்ரீ காந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்போது இந்த போஸ்டரால் படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.