ஆதிபுருஷால் ஆண்டவரிடம் தஞ்சமடைந்த பிரபாஸ்.. மாஸ் கூட்டணியில் உருவாகும் ப்ராஜெக்ட் கே

Project K: பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் பிரபாஸுக்கு பாகுபலி 2 படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த படமும் போகவில்லை. தொடர்ந்து ஹட்ரிக் தோல்வி கொடுத்துள்ளார் பிரபாஸ். இதனால் இவரின் சினிமா கேரியர் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது. அதுவும் கடைசியாக இவரது நடிப்பில் ஆதிபுருஷ் படம் வெளியாகி இருந்தது.

இந்த படம் இணையத்தில் கேலிக்கூத்துக்கு உள்ளானது. மேலும் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் ஆதிபுருஷ் படம் திணறி வருகிறது. இதனால் அடுத்த ஒரு தரமான ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரபாஸ் இருக்கிறார். இதனால் அவர் கையில் எடுத்திருக்கும் படம் தான் ப்ராஜெக்ட் கே.

கிட்டத்தட்ட 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். மேலும் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ப்ராஜெக்ட் கே படத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஆன தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாஸுக்கு கை கொடுக்க கமலும் இந்த படத்தில் இணைந்துள்ளார். ப்ராஜெக்ட் கே படத்தில் முக்கிய வில்லனாக கமல் நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்திற்கு மட்டும் கிட்டத்தட்ட 150 கோடி கமலுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டு இருக்கிறது.

மேலும் கமலுடன் பணியாற்றுவது தனது பாக்கியம் என பிரபாஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். கோவிட் தொற்றுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜெக்ட் கே படம் சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இப்படத்தை முழுவீச்சாக எடுத்து முடிக்க படக்குழு விரைந்து செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ராஜெக்ட் கே படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அதுமட்டுமின்றி இப்படம் ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாக இருக்கிறது. பல முன்னணி நட்சத்திரங்கள் ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்துள்ளதால் கண்டிப்பாக பிரபாஸுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

project-k-kamal
project-k-kamal