Cinema : சினிமாவில் எந்த திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் அது பெரிய நடிகரின் திரைப்படமா என்று தான் மக்கள் தற்போது பார்க்கின்றனர். அந்த திரைப்படத்தை பார்த்ததுக்கு பிறகு தான் தெரியும் அது மொக்க படம் என்று. இதுதான் இன்றைய சினிமாவில் நடந்து கொண்டிருக்க கூடிய விஷயம்.
நடிகரின் வரலாறு :
முதலில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க வேண்டும் என்று சினிமாவில் காலடி எடுத்து வைத்த போது அவருக்கு அது கை கொடுக்கவில்லை. அதன் பின் எழுத்து மற்றும் இயக்கும் திறமையை வைத்து சினிமாவில் போராடிக் கொண்டிருந்தார்.
2019-இல் ரவி மோகன் நடிப்பில் கோமாளி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் இவர் வரும் ஒரு சீன் திரைப்படம் பார்க்கும் மக்களை ஈர்த்தது. இந்த கோமாளி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் ஒரு இயக்குனராக வளர்ந்து வந்தார் பிரதீப் ரங்கநாதன்.
அதன்பின் சில வருடங்கள் கழித்து 2022ல் லவ் டுடே என்ற படத்தை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார். வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுத்த திரைப்படம் 105 கோடி வரையிலும் வசூலை எட்டியது. இந்த திரைப்படத்தில் இருந்து இவருக்கு ஹீரோ இமேஜ் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இந்த வருடம் 2025-இல் ட்ராகன் திரைப்படம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்தது. 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தியேட்டரில் வெளியாகி 150 கோடி வசூலை பார்த்தது. இந்தத் திரைப்படம் பிரதீப் ரங்கநாதனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
தற்போது அப்டேட்
இந்த வருடம் பிரதீப் ரங்கநாதனின் டூட் திரைப்படம் தீபாவளிக்கு அக்டோபர் 17 வெளியிடப்பட உள்ளனர். இதைத்தொடர்ந்து துருவ் விக்ரமின் பைசன் திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகயுள்ளது. பிரபலங்களின் திரைப்படம் என்பதால் நிச்சயம் தீபாவளி என்று வசூலில் மிஞ்சும் என்ற நம்பிக்கையில்ரிலீஸ் வெளியீட்டுக்கு மும்மாதங்கள் முன்புதான் தமிழ்நாடு திரையரங்க உரிமைகள் பெரும் தொகைகளில் முடிவு செய்யப்பட்டுள்ளன.