பல மடங்கு போராடி ஜெயித்து நிற்கும் தனுஷ்.. அர்த்தமே இல்லாமல் உளறி கொட்டிய பிரதீப் ரங்கநாதன்

யாராலையும் தொடவே முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் தனுஷ். பல மடங்கு போராடி இன்று சினிமாவில் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கிறார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரை எழவிடாமல் தலையில் கொட்டியது தமிழ் சினிமா.

இன்று பெரிய இடத்து மாப்பிள்ளை, ஏகப்பட்டு சொத்துக்கள் வைத்திருக்கிறார், என்றெல்லாம் அவர் மீது ஒரு அதிகார பிம்பத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் ஆரம்பத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு, அனைவராலும் ஒதுக்கப்பட்டவர் தான் தனுஷ். அதை எல்லாம் பொறுப்பெடுத்தாமல் இன்று ஜெயித்து நிற்கிறார்.

இப்படி திறமை உள்ள ஒருவரை எவராலும் காலி பண்ண முடியாது, அதற்கு உதாரணமாக நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். ஏன் சிவகார்த்திகேயனை கூட சொல்லலாம். ஆரம்பத்தில் இவர் படாத கஷ்டங்களா, தனியாக நின்று தன் திறமையினால் மட்டுமே ஜெயித்து வந்தவர் சிவா.

சமீபத்தில் டிராகன் பட விழாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன். தன்னை வளர விடாமல் தடுக்குகிறார்கள் அடக்குகிறார்கள் என்றெல்லாம் உளறி கொட்டினார். அது தனுஷ் தான் என்று பின்னர் சமூகவலை வலைதளத்தில் பேச்சுக்கள் அடிபட்டது .

இது முற்றிலும் ஒரு கட்டுக் கதை, திறமை இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற பல பேர் தங்களுடைய சொந்த திறமையால் இன்று சினிமாவில் வளர்ந்து நிற்பவர்கள். இப்படி எளிதாக பிரதீப் ரங்கநாதன் அடுத்தவர் மீது பழி போடுவதெல்லாம் சும்மா. உண்மையான திறமை உயரும்.

Leave a Comment