உயிர் பலியுடன் தொடங்கிய முதல் காட்சி.. புஷ்பா 2 பார்க்க வந்த இடத்தில் நடந்த பரிதாபம்

Pushpa 2: அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் புஷ்பா 2 வெளியாகி இருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே இதன் முதல் பாகம் நல்ல வசூலை பெற்று பாக்ஸ் ஆபிசை திணறடித்தது.

அதை அடுத்து இரண்டாம் பாகத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று படம் வெளியாகி உள்ளது. ஆனால் நேற்று இரவே தமிழ்நாட்டைத் தவிர மற்ற இடங்களில் படம் திரையிடப்பட்டது.

அதில் ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 இரவு 10:30 மணிக்கு வெளியானது. அதை பார்க்க ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. அப்போது அல்லு அர்ஜுனும் அவர்களுடன் இணைந்து படத்தை பார்த்து ரசித்தார்.

அவரைக் காண ரசிகர்கள் பட்டாளம் கூடிய நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதை தடுக்க முயன்ற போலீசார் லத்தி சார்ஜ் செய்துள்ளனர். அதன் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

புஷ்பா 2 பார்க்க வந்த பெண் பலி

கூட்டத்தில் நசுங்கி சுயநினைவை இழந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனாலும் அவர் பிழைக்கவில்லை. அவருடன் அவர் குழந்தையும் இந்த இடிபாடுகளில் சிக்கி தற்போது ஐசியூவில் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்த நெரிசலில் பல இளைஞர்கள் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் தற்போது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஆனால் மற்ற மாநிலங்களில் இப்படி எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலையில்தான் இது போன்ற உயர் பலி நடந்துள்ளது. முதல் காட்சி இப்படி துயர சம்பவத்தோடு தொடங்கிய நிலையில் தற்போது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment