ரெண்டு இல்ல மூணு.. தள்ளி போகும் ரிலீஸ்? ஆனாலும் ஹாப்பி mode-ல் இருக்கும் ரசிகர்கள்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. இந்த நிலையில் புஷ்பா 2 படமோ ரிலீஸ் க்கு முன்பே 1000 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிடும் என்பதற்காகவே ஒரு exclusive அப்டேட் ஒன்றையும் படக்குழு கொடுத்துள்ளது. புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிவரை அந்த படம் இழுத்து அடிக்கப்பட்டதற்கு காரணம் அல்லு அர்ஜுன் மற்றும் படத்தின் இயக்குநர் சுகுமார் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனை தான் என ஏகப்பட்ட தகவல்கள் பரவின.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம் வெளியாகுமா ஆகாதா என்ற குழப்பத்தில் இருந்தபோது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது படக்குழு. அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்த நேரத்தில் தற்போது ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளார்கள்.

புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதியை வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே வசூல் வேட்டையை நடத்தியுள்ள நிலையில் படத்தின் 3 ஆம் பாகம் வெளியாகும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.

இதை கேட்ட ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர். ஒருவேளை புஷ்பா 2 ஹிட் என்றால் புஷ்பா 3 அசால்டாக 3000 கோடியை அள்ளிவிடும்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment