1. Home
  2. கோலிவுட்

பார்த்திபனுக்கு அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள். டரியல் பாதையில் சூப்பர் ஹிட் 2ஆம் பாகம்

பார்த்திபனுக்கு அடுத்தடுத்து வெளிவர உள்ள 5 படங்கள். டரியல் பாதையில் சூப்பர் ஹிட் 2ஆம் பாகம்

R Parthiban Upcoming Movies: நக்கல், நையாண்டிக்கு பெயர் போன ரா பார்த்திபன் எந்த ஒரு கதையிலும் தன்னுடைய இயல்பான நடிப்பு, புதுமையான வசனங்கள், சிறப்பான வசன உச்சரிப்பு மூலம் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்திருப்பவர். அவர் நடிப்பில் பல படங்கள் வெளிவர காத்திருக்கின்றன அவற்றில் சில.

உயர்திரு 4G:  வெங்கட் பாக்கர் இயக்கத்தில் காமெடியுடன் கூடிய திரில்லர் படமான " 4ஜி" யில் ஜிவி பிரகாஷ்,,கீர்த்தி சுரேஷ், சதீஷ் போன்ற பல இஷ்களுடன்  நடிக்கும் பார்த்திபன் திர்லரில் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் நடித்த போதும் படத்தில் தனக்கென தனி ஒரு வெயிட்டேஜ் உருவாக்கி விடுவார் இந்த நக்கல் மன்னன்.

மீண்டும் புதியபாதை:  புதிய பாதை மூவி, பார்த்திபனின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது சிம்பு ஓகே சொன்னால் இதன் இரண்டாம் பாகம்எடுக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் சிம்பு கதையே வேறு. தப்பான பாதையை தேர்வு செய்துள்ளார் பார்த்திபன்.

துருவ நட்சத்திரம்: கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கத்தில் ரிலீசுக்கு ரெடியாகி கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக இவரின் இயக்கத்தில் அந்த ஒரு நாள் என்ற படத்திலும் பார்த்திபன்  நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

கைதி 2 : லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் விறுவிறுப்பான கதைக்களத்துடன் அமைந்த கைதி வெற்றியடைந்ததை அடுத்து அதன் அடுத்த பாகம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் பார்த்திபன் முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

மேலும் பார்த்திபன் அவர்கள் விஜய் மில்டனின் ஒரு மூவியிலும் கமிட் ஆகி உள்ளார். குடைக்குள்  மழையில் இருந்தவருக்கு வரிசையாக படமழை பொழிய காத்துக் கொண்டிருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.