1. Home
  2. கோலிவுட்

தக் லைஃப் படத்தில் நடித்த ரஹ்மானின் மகள்.. வைரலாகும் புகைப்படம்

தக் லைஃப் படத்தில் நடித்த ரஹ்மானின் மகள்.. வைரலாகும் புகைப்படம்

Mani Ratnam : மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் கமல், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என ஏகப்பட்ட பட்டாளமே நடித்திருந்தனர்.

ஆனால் படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை தான் பெற்று வந்தது. இந்த சூழலில் நடிகர் ரஹ்மானின் மகளும் தக் லைஃப் படத்தில் பணியாற்றி இருக்கிறார். துருவங்கள் பதினாறு படத்தில் ரஹ்மான் அற்புதமாக நடித்து இருந்தார்.

இவரது மகள் அலீஷா ரஹ்மான் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். தக் லைஃப் படத்திலும் மணிரத்தினத்துடன் இணைந்து துணை இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். இது தவிர நாசரின் மகளாகவும் நடித்து இருக்கிறார்.

தக் லைஃப் படத்தில் நடித்த ரஹ்மானின் மகள்

தக் லைஃப் படத்தில் நடித்த ரஹ்மானின் மகள்.. வைரலாகும் புகைப்படம்
thug-life
தக் லைஃப் படத்தில் நடித்த ரஹ்மானின் மகள்.. வைரலாகும் புகைப்படம்
thug-life-kamal

அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் ஒரு நல்ல வாய்ப்பை மணி சார் தனக்கு கொடுத்ததாக அதில் கூறியிருக்கிறார். இந்த புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஹ்மானுக்கு இப்படி ஒரு மகளா என பலரும் வியந்து பார்க்கின்றனர். மேலும் இவ்வளவு அழகுடன் இருக்கும் இவர் கதாநாயகியாகவே படங்களில் நடிக்கலாம் என்றும் கூறி வருகின்றனர். லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகை சஞ்சனாவும் இந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

அவரும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல நட்சத்திரங்களை மணிரத்னம் ஒன்று சேர்த்து தக் லைஃப் படத்தில் கொடுத்தாலும் ரசிகர்களை கவர தவறியது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.