மீண்டும் 1000 கோடி வசூலுக்கு ஸ்கெட்ச் போட்ட ராஜமவுலி.. பிரம்மாண்டமாக உருவாகும் வெற்றிக்கூட்டணி

பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி தனது படைப்புகள் மூலம் வசூலை வாரி குவித்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 படங்கள் வசூல் வேட்டை ஆடியது. இந்நிலையில் சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர் ஆர் ஆர்.

ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா மற்றும் பலர் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்திருந்தது. மேலும் 1000 கோடியை தாண்டி வசூல் வேட்டை ஆடியது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் ஒரு படம் உருவாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று ராஜமௌலியிடம் அதே ஆர் ஆர் ஆர் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை இயக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு ராஜமௌலியும் சம்மதித்ததாக தெரிகிறது. இதனால் மிக விரைவில் பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்த ராஜமௌலி படம் இயக்கி வருகிறார். இப்படமும் காடுகளை மையமாக வைத்த எடுக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதாவது 500 கோடி பட்ஜெட்டில் படம் உருவாக உள்ளது.

இந்தப் படம் முடிந்த கையோடு மீண்டும் ஆர் ஆர் ஆர் கூட்டணியில் படம் உருவாக வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும். மேலும் தொடர்ந்து ராஜமௌலி இதுபோன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து வசூலை வாரி குவித்து வருகிறார்.

இதனால் பல தயாரிப்பாளர்களும் ராஜமௌலியின் படத்தை தயாரிக்க வரிசை கட்டி நிற்கின்றனர். அந்த வகையில் மீண்டும் ஆர் ஆர் ஆர் கூட்டணியில் உருவாகும் படமும் கண்டிப்பாக ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.