விஜய் வெற்றி பெற வாய்ப்பில்லை.. அண்ணனை வைத்து சொல்ல வெச்ச தலைவர்

Rajini : ரஜினியின் சகோதரரான சத்ய நாராயணனின் பேட்டி தான் வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அதாவது நேற்றைய தினம் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பேசு பொருளாக மாறி இருக்கிறது. ஏற்கனவே ரஜினி அரசியலில் இறங்குவதாக கூறியிருந்தார்.

ஆனால் இப்போதைக்கு அரசியலில் வர தனக்கு எண்ணம் இல்லை என்று கூறி படங்களில் பிஸியாகிவிட்டார். அவ்வாறு தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனால் விஜய் திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விட்டார்.

மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட உள்ளார். விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் வாக்குவாதங்கள் வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ரஜினியின் சகோதரர் சத்ய நாராயணன் அண்ணாமலைக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் உள்ளதாக கூறியிருக்கிறார்.

விஜய்க்கு எதிர்மறையாக செயல்படும் ரஜினி

blue-sattai-maran
blue-sattai-maran

மேலும் விஜய் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று நேரடியாக கூறிவிட்டார். இது விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் ப்ளூ சட்டை மாறன் ரஜினியை விமர்சித்து பதிவு போட்டிருக்கிறார்.

அதாவது இதை ரஜினி சொல்லாமல் அவர் அண்ணனை சொல்ல வைத்திருக்கிறார். ஏனென்றால் ரஜினி சொன்னால் ரவுண்டு கட்டி அடிப்பார்கள், அதான் அவரு சொல்றார், என்ன ஒரு சாணக்கிய தந்திரம் தலைவருக்கு என்று பதிவிட்டிருக்கிறார்.

ஒருவேளை ரஜினி சொல்லி தான் அவரது அண்ணன் இப்படி பேசி இருக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. ரஜினி தரப்பிலிருந்து இதற்கான விளக்கம் கொடுக்கிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.