விஜய்யின் வாரிசு படத்திற்கு பிறகு தற்போது லோகேஷ் இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முக்கால்வாசி படபிடிப்பு காஷ்மீரில் முடிந்துவிட்ட பிறகு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்னையில் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் லோகேஷின் கதைக்கவும் விஜய்யின் நடிப்பிற்காகவும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் லியோ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் மாதம் திரையில் வெளியிட முடிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது இவர் நடித்து வெளிவரும் படங்கள் அனைத்தும் இவருடைய சினிமா கேரியரில் அடுத்த பக்கத்திற்கு இவரை கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம். அதிலும் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாகவும் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களான துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரியமானவளே போன்ற படங்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார்.
இதே மாதிரி மறுபடியும் ஒரு படத்துலயாவது நடிக்க மாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விஜய் நடித்து வெளிவந்த படம் தான் சச்சின். இப்படத்தை இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கி 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது. இதில் இவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் நகைச்சுவைக்கு வடிவேலு நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி நல்ல விமர்சனங்களை பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியை கொடுத்தது.
இப்படம் இப்பொழுதும் டிவியில் ஒளிபரப்பானால் இதைப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் அவ்வளவு க்யூட்டாக இருந்திருப்பார். அதிலும் விஜய்யும் வடிவேலும் பல காட்சிகளில் காமெடி செய்து அதிக பாராட்டை பெற்றிருப்பார்கள். ஆனாலும் இந்த படத்திற்கு இவ்வளவு பிளஸ் விஷயங்கள் அமைந்திருந்தாலும் ஒரு மிகப்பெரிய மைனஸ் ஆக இவருக்கு தோல்வியை கொடுத்தது ரஜினி என்றே சொல்லலாம்.
அதாவது 2சச்சின் படம் வெளியான அன்றே ரஜினி நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் வெளிவந்தது. ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அத்துடன் 890 நாட்கள் திரையரங்குகளில் ஓடி பெரும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெற்றது. எங்கு பார்த்தாலும் சந்திரமுகி படத்தை மட்டுமே பேசிக் கொண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் சச்சின் படம் கொஞ்சம் தோல்வியை கொடுத்தது என்றே சொல்லலாம்.
எப்படி என்றால் சச்சின் படம் தோல்வியா என்று இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு,அவர்களிடம் கேட்ட பொழுது சச்சின் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக 200 நாட்கள் திரையரங்கில் ஓடியது. ஆனால் சந்திரமுகி படத்தோடு வெளியிட்டதால் சச்சின் படம் மெகா ஹிட் ஆனது அந்த அளவுக்கு தெரியாமல் போய்விட்டது. இருந்தாலும் சந்திரமுகி படத்தோட சச்சின் படத்தை பார்க்கும் பொழுது கொஞ்சம் தோல்விதான் என்று கூறியுள்ளார்.