Rajini, Sun Pictures: சன் பிக்சர்ஸ், ரஜினி கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டையாடிய படம் ஜெயிலர். இதைத்தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணியில் தலைவர் 171 படம் உருவாகிறது. இதில் ஹைலைட் என்னவென்றால் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க இருக்கிறார். இப்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கியுள்ள நிலையில் பின்னணி வேலைகளில் மும்மரம் காட்டி வருகிறார்.
மேலும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜைக்கு இந்த படம் ரிலீஸாக உள்ளது. மேலும் இப்போது விஜய் மற்றும் வெங்கட் பிரபு படத்தை பற்றிய விஷயங்கள் வெளியே வந்தால் லியோ படத்தின் ஹைப்பை குறைத்து விடும். வெங்கட் பிரபுவிடம் தளபதி 68 படத்தைப் பற்றி எந்த விஷயமும் வெளியாக கூடாது என கண்டிஷன் போட்டிருக்கிறார் விஜய்.
இதனால் தளபதி 68 படத்திற்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் லோகேஷ் எப்போதுமே வித்யாசமான முறையில் தன்னுடைய படங்களை அறிவிப்பார். அப்படிதான் லியோ படத்தின் அறிவிப்பு வெளியான போதே ரிலீஸ் தேதியும் லாக் செய்து வைத்திருந்தார்.
அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்தின் அறிவிப்பு வெளியான 3 மணி நேரம் 7 நிமிடங்களில் கிட்டத்தட்ட 200 ஆயிரம் லைக்குகள் பெற்றது. ஏனென்றால் இதற்கு முன்னதாக லோகேஷ் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு தான் காரணம். அதேபோல் ரஜினி படத்திற்கும் வேற லெவல் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இந்த படம் டிராப்பானதாக ஒரு பேச்சு போய்க் கொண்டிருந்தது.
இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக சன் பிக்சர்ஸ் தலைவர் 171 அறிவிப்பை வெளியிட்டது. இதன் மூலம் லோகேஷின் சமூக வலைதள பக்கத்தில் 69.3k லைக்கள் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் 70.2k லைக்குகள் என மொத்தமாக 139.5 ஆயிரம் லைக்குகள் மட்டுமே பெற்றிருந்தது.
இதற்கெல்லாம் காரணம் சன் பிக்சர்ஸின் ஆர்வக்கோளாறு தான் என்று கூறப்படுகிறது. ரஜினியும் லோகேஷ் படத்தில் நடித்தால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்ப்பு வைத்திருந்த நிலையில் அதையும் சுக்கு நூறாக ஆக்கியுள்ளது. ஆகையால் எதிர்பார்ப்பு இல்லாமல் போஸ்டர் வெளியான நிலையில் இந்தப் படத்திற்கான ஹைப் தற்போது குறைந்து இருக்கிறது.