Rajini: ரஜினி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடித்த அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இனி இவருடைய மார்க்கெட் அவ்வளவு தான் என்று பலரும் வாய்க்கு வந்தபடி பேசினார்கள். அதே மாதிரி கடந்த வருடம் இவருடைய நடிப்பில் எந்த படமும் வெளி வராததால் தோல்வியில் துவண்டு போய்விட்டார் என்று பல பேச்சுக்கள் இவரைப் பற்றி கன்னா பின்னானு வந்தது.
இதனை அடுத்து நெல்சன் கூட்டணியில் இவர் சேர்ந்த பொழுது, ஏன் ரஜினி இந்த மாதிரி ஒரு இயக்குனரை தேர்வு செய்தார். இவர் ஏற்கனவே விஜய்க்கு மொக்கை படத்தை தான் கொடுத்தார். அதனால் இந்த படமும் ரஜினிக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுக்கும் என்று பலரும் அவர்களுடைய கருத்துக்களை கொடுத்து வந்தார்கள்.
ஆனால் பேசின அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக ஜெயிலர் படம் மிகப்பெரிய ஹிட் ஆகி சக்க போடு போட்டு இமாலய வெற்றியை பார்த்திருக்கிறது. இந்த வெற்றியை கொஞ்சம் கூட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு ரஜினியை இப்படம் மிகப்பெரிய ஒய்யாரத்தில் தூக்கி விட்டிருக்கிறது. இப்படி சந்திராயன் 3 போல் இவருடைய கேரியர் உயர்ந்துவிட்டது.
ஆனால் இதற்கு தற்போது மிகப்பெரிய பேராபத்து வரும்படி ஒரு விஷயம் அமைந்திருக்கிறது. அதாவது இவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் மொகைதீன் பாய் என்ற கேரக்டரில் கேமியோ ரோல் பண்ணி இருக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர் வெளியான நிலையில் ரஜினியை பலரும் கலாய்த்து வச்சு செய்தார்கள். அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக ஜெயிலர் வெற்றி இருக்கிறது. இனி அடுத்ததாக வெளிவரும் லால் சலாம் படம் எந்த அளவுக்கு ஹிட் அடிக்கும் என்று தெரியவில்லை. ஒருவேளை இதெல்லாம் முன்னாடியே தெரிந்திருந்தால் ரஜினி இப்படத்தில் நடித்திருந்திருக்க மாட்டார்.
அந்த வகையில் லால் சலாம் படம் வெளியானால் ரஜினியின் கேரியர் நிச்சயமாக பாதிக்கப்படும். இதனால் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் எலி வலைக்குள் மாட்டிக் கொண்டு தத்தளித்துக் கொண்டு வருகிறார் ரஜினி. ஜெயிலர் படத்தின் பாதி அளவுக்கு கூட லால் சலாம் படம் வெற்றி பெறுமா என்ற பயத்தில் தான் தற்போது இருக்கிறார்.