Actor Rajinikanth: தற்போது எங்கு திரும்பினாலும் ஜெயிலர் படத்தின் வெற்றியைப் பற்றி தான் பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். மேலும் சமீப காலமாக கொஞ்சம் டல்லாக இருந்த ரஜினியின் கேரியரும் இப்படத்தின் மூலம் உயர்ந்துவிட்டது.
ஆனால் இப்பொழுது ரஜினி செய்த விஷயங்கள் தமிழக ரசிகர்களை கலங்கடிக்க வைத்து, அசிங்கப்படும் அளவிற்கு அமைந்திருக்கிறது. அதாவது ஜெயிலர் படத்தின் வெற்றியை பார்த்த பிறகு ரஜினி இமயமலைக்கு சென்றிருந்தார். அங்கே ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று சாமியார்களை சந்தித்தார். அதோடு தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்ததோடு, பத்ரிநாத் கோவிலிலும் வழிபாடு செய்தார்.
அதன்பிறகு அவர் இமயமலை பயணத்தை முடித்து திரும்பினார். இதனை அடுத்து அவர் சென்னைக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்து நிலையில் திடீரென்று உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோ விற்கு சென்று யோகி ஆதித்தனாரை சந்தித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவருடைய காலில் விழுந்திருக்கிறார்
இதை கொஞ்சம் கூட ஏற்க முடியாத செயலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு ரஜினி நடித்த பல படங்கள் ஓடவில்லை, அதற்கு காரணம் இவர் பேசிய பேச்சு இவருடைய கொள்கை மற்றும் அரசியல் பேச்சுகள் சரியாக இல்லாததால் தான். தற்போது திருந்திருப்பார் என்று நினைத்த பொழுது திருந்தவே மாட்டார் என்று சொல்லும் படியாக இவருடைய செயல்கள் அமைந்துவிட்டது.
அதாவது பிஜேபி கட்சியின் சார்பாக வாழும் சங்கியாக தான் அமைதியாக இருந்து வந்தார். பின்பு இப்படி வெற்றி பெற்றதும் இன்னொரு முகத்தை உடனே காட்டிவிட்டார். இதனால் இவரை வைத்து மறுபடியும் எக்காரணத்தைக் கொண்டும் படம் எடுக்கவே கூடாது என்று முடிவுடன் இருக்கிறார் கலாநிதி மாறன்.
மேலும் ஜெயிலர் படம் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் தமிழக ரசிகர்கள் தான். அப்படிப்பட்ட ரசிகர்கள் கஷ்டப்படும் படியாக ரஜினி இந்த விஷயத்தை செய்திருக்கிறார். தற்போது தான் ஜெயிலர் படத்திற்கு வசூல் அளவில் பணமழை கொட்டுகின்றது. அதைக் கெடுக்கும் படியாக ரஜினி செயல்கள் இருக்கிறது என்று தலையில் அடித்துக் கொண்டு புலம்பித் தவிக்கிறார் கலாநிதி மாறன். எப்படி இவர் செய்ததால் இனி நடிக்க இருக்கும் அடுத்த படங்களில் தோல்வியை சந்திக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.