ஆண்டவருக்கே விபூதி அடித்த சூப்பர் ஸ்டார்.. ஆசை காட்டி தன் பக்கம் இழுத்த சன் பிக்சர்ஸ் மாறன்

Kamal,Rajini : சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் இமாலய வெற்றி பெற்றிருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் செய்த படங்களின் வசூல் சாதனையை முறியடித்து கிட்டத்தட்ட 635 கோடி வசூல் செய்திருக்கிறது. இதனால் ரஜினி உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகிறாராம்.

இதே சூட்டுடன் தன்னுடைய அடுத்த படங்களிலும் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார். அதன்படி அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ தோற்றத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணி முடிவான நிலையில் தலைவர் 171 இல் தான் இவர்கள் பணியாற்ற உள்ளார்கள் என்பது உறுதியாகிவிட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக தலைவர் 171 போஸ்டர் வெளியிட்டு இருந்தது. ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் குழப்பத்தையும் உண்டாக்கி இருக்கிறது.

அதாவது கோவிட் தொற்று பரவலுக்கு முன்பே ரஜினி, லோகேஷ் இணைய இருப்பது உறுதியானது. அப்போது இந்தப் படத்தை கமல் தான் தயாரிப்பதாக முடிவெடுத்து இருந்தனர். அதன் பிறகு சில காரணங்களினால் இப்படம் தள்ளி போக லோகேஷ் மற்றும் கமல் கூட்டணியில் விக்ரம் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

அதன் பிறகு கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பாக சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி, கமல், லோகேஷ் கூட்டணியில் ஒரு படம் கண்டிப்பாக உருவாகும் என்று நினைத்த நிலையில் திடீரென தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

இதற்கு காரணம் ஜெயிலர் வெற்றியால் பணத்தை வாரி இறைத்திருக்கிறார் கலாநிதி மாறன். லோகேஷ், ரஜினி இணைந்தால் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூல் உறுதியாக இருக்கும் என்ற கணிப்பில் இந்த படத்தை தாங்கள் தயாரிக்கிறோம், ரஜினி கேட்ட சம்பளத்தை தருகிறோம் என சூப்பர் ஸ்டாரிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். வேறு வழி இல்லாமல் ரஜினியும் இதற்கு ஒற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் ஆண்டவருக்கே சூப்பர் ஸ்டார் விபூதி அடித்து விட்டார் என கூறி வருகிறார்கள்.