Actor Rajini Upcoming Movies: கடந்த வருடம் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் அமோக வெற்றி பெற்றது. அதனால் தற்போது டபுள் மடங்கு உற்சாகத்துடன் வயது ஒரு எண்ணிக்கை தான், அதையெல்லாம் தாண்டி ஆர்வம் இருந்தால் ஜெயிக்கலாம் என்பதை நிரூபிக்கும் விதமாக 73 வயதிலும் நிற்க கூட நேரம் இல்லாமல் பிஸியாக நடித்து வருகிறார். அதுவும் இப்பொழுதும் கொஞ்சம் கூட இவருடைய எனர்ஜி குறையாமல் நடிப்பதுதான் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் படங்கள் அனைத்தும் விடாமல் வரிசை கட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கிட்டத்தட்ட முக்கால்வாசி முடிந்த நிலையில் இன்னும் ஓரிரு மாதங்கள் முழுமையாக படப்பிடிப்பு முடிவடைந்து விடும்.
இதற்குப் பிறகு லோகேஷ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் கமிட்டாகி இருக்கிறார். லோகேஷ் இயக்கமும் ரஜினி நடிக்கும் இணைந்து வரக்கூடிய படம் வேற லெவலில் ஒரு சம்பவத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வசூலை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக லோகேஷ் கூட்டணியை முடித்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் கூட கூட்டணி வைக்கப் போகிறார். மாரி செல்வராஜ் இயக்கக்கூடிய படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் ரஜினி சேர்ந்திருப்பதால் இவர்களுடைய காம்போவில் இருக்கக்கூடிய படம் விமர்சன ரீதியாக கண்டிப்பாக வெற்றி பெற்று விடும்.
இதையெல்லாம் முடித்துவிட்டு நெல்சன் கூட மறுபடியும் கூட்டணி வைக்கும் விதமாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடிந்த நிலையில் கலாநிதி மாறன் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார். அந்த வகையில் இதற்கான ஒவ்வொரு விஷயங்களையும் இறங்கி செய்வதற்கு நெல்சன் தயாராகி விட்டார்.
அடுத்தபடியாக இளம் இயக்குனருடன் கூட்டணி வைக்கும் விதமாக இயக்குனர் அட்லியுடன் இணையப் போகிறார். அட்லி எடுக்கக்கூடிய படங்கள் காப்பி கேட் படமாக இருந்தாலும் வசூல் அளவில் பட்டையை கிளப்பி விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால் இப்படமும் இண்டஸ்ட்ரியல் ஹிட் ஆகிவிடும். ஆக மொத்தத்தில் தற்போது விஜய் அரசியலிலும், அஜித் பைக் வேர்ல்ட் டூரிலும் பிஸியாக இருப்பதால் இந்த சான்சஸ் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று தலைவர் களத்தில் இறங்க தயாராகி விட்டார்.