ரஜினி, கமல் என இரண்டு ஜாம்பவான்கள் 70, 80களில் இருந்து இப்பொழுது வரை ரசிகர்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவர்கள் சினிமாவில் நுழைந்த காலத்தில் இருந்து நீயா நானா என போட்டி போட்டு படத்தில் நடித்து வருவார்கள். இவர்களை சினிமாவிற்குள் வளர்த்து விட்டது இயக்குனர் கே.பாலச்சந்தர்.
இதனால் இவர்கள் எப்பொழுதுமே சினிமாவின் குருவாக பாலச்சந்தரை நினைத்து வருவார்கள். இது மட்டுமில்லாமல் பாலச்சந்தரிடம் உரிமையாக சண்டையும் போட்டுக் கொள்வார்கள். கமல் எப்பொழுதுமே ஒரு கர்வத்துடன் தான் இருப்பாராம். அதற்கு காரணம் அவர் சிறு வயதில் இருந்தே சினிமாவில் இருந்து வருவது தான்.
மேலும் கமலுக்கு எப்போதுமே ரஜினி மீது ஒரு பொறாமை இருந்து கொண்டே இருக்கும். அதற்கு காரணம் அவர் பெங்களூரில் இருந்து வந்து கையை காலை ஆட்டி விட்டு தலையை கோதிவிட்டு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறார் என்பதுதான். மேலும் பாலச்சந்தர் ரஜினிக்கு ஒரு பட வாய்ப்பு கொடுத்து விட்டார் என்றால் அவரிடம் போய் எனக்கு நீங்க முதல்ல பட வாய்ப்பை தர வேண்டும் என்று கமல் சண்டை போட்டு விடுவாராம்.
அடுத்ததாக இயக்குனர் கமலுக்கு பட வாய்ப்பு கொடுத்துவிட்டார் என்றால் ரஜினி, இயக்குனரிடம் நீங்கள் இருவருக்கும் சமமான படங்களை தர வேண்டும் என்று சொல்வாராம். இதனை பார்த்து கடுப்பான இயக்குனர் பாலச்சந்தர் இருவருக்குமே பட வாய்ப்புகளை சமமாக கொடுக்க ஆரம்பித்தாராம். அதன் பிறகு இவர்களின் பட வெற்றியைத் தொடர்ந்து அதிலும் போட்டி பொறாமையும் வளர்ந்து கொண்டே இருந்தது.
பின்பு ஒரு காலகட்டத்திற்கு பிறகு இவர்களே புரிந்து கொண்டு நண்பர்களாக மாறிவிட்டார்கள். இதன் வெளிப்பாடாக தான் எல்லா மேடைகளிலும் இவர்கள் பேசும்போது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான். எங்களுக்குள் எப்போதுமே சண்டை வராது என்று பேசுவார்கள்.
ஆனாலும் இவர்களுக்குள் இப்பொழுது சண்டை இல்லாவிட்டாலும் ஒரு மறைமுகமான போட்டி இருந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இந்தப் போட்டியுடன் இவர்கள் நடிப்பதன் விளைவாக தான் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்துகிறது.