1. Home
  2. கோலிவுட்

கடைசி படம் வரை விஜய் உடன் மல்லுக்கட்டும் ரஜினி.. வம்பு பேசும் ப்ளூ சட்டை!

கடைசி படம் வரை விஜய் உடன் மல்லுக்கட்டும் ரஜினி.. வம்பு பேசும் ப்ளூ சட்டை!

Rajini : சினிமாவில் பல பயங்கரமான ஹிட் படங்களை கொடுத்து இன்று வரையிலும் வெற்றி கொடி கட்டி பறப்பவர் ரஜினிகாந்த்.

ரஜினியின் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட அவரது ஸ்டைலுக்கு இருக்கும் ரசிகர்கள் தான் அதிகம். தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் நிறைய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருக்கிறார் ரஜினி.

தற்போதைய நிலை:

அண்மையில் டைரக்டர் ஹச்.வினோத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து இரண்டாவது முறையாக படத்திற்கான கதையை கூறி இருக்கிறார். இந்நிலையில் ரஜினியை பற்றி இன்னொரு பேச்சும் வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இது உண்மைதானா??

"ஒரு காலத்துல ரஜினி மாதிரி ஆகணும்னு அவரோட பட டைட்டில் வைப்பாங்க. அவரை மாதிரி பஞ்ச் பேசுவாங்க. ஆனால் ரஜினி கடந்த சில வருஷமாகவே விஜய் மாதிரி ஆகுனும்னு முருகதாஸ், நெல்சன் எச் வினோத் படங்கள்ல நடிச்சிட்டு இருக்காரு".

இப்படி ரஜினி பற்றி ப்ளூ சட்டை மாறன் தற்போது வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். எப்படி இவ்வளவு வயதாகியும் விஜய் உடன் ரஜினி போட்டி போடுகிறார் என்று ரசிகர்களுக்கு இந்த விஷயம் பயங்கரமான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

தவறு என்ன?

தற்போதைய இளைய சமுதாயத்திற்கான திரைகதையை ரஜினி தேர்வு செய்வதில் தவறு எதுவும் இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் போட்ட இந்த பதிவு ரசிகர்களை ஒரு நிமிடம் யோசிக்க வைத்துள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.