ஆசை காட்டி மோசம் செய்யும் ரஜினி.. இயக்குனர்களின் பரிதாப நிலை
Rajini : பொதுவாக ரஜினி சினிமாவில் நல்ல படங்கள் வெளியானால் உடனடியாகவே படக்குழுவை வீட்டிற்கு அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவ்வாறு சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்காக படக்குழுவை அழைத்து நேரில் வாழ்த்து இருந்தார். ரஜினி வீட்டிலேயே பத்து பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய மினி தியேட்டர் இருக்கிறதாம். ஒரு படம் வெளியாகி ஹிட் அடித்தால் ரஜினி அந்த படத்தை கேட்டு வாங்கி பார்ப்பாராம். அதன் பிறகு படகுழுவை வீட்டிற்கு அழைத்து சந்தித்து பேசுவார்.
குறிப்பாக படத்தில் உள்ள ஒவ்வொரு அம்சத்தையும் குறிப்பிட்டு பாராட்டுவாராம். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்வது ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான். இது குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இயக்குனர்களை ஏமாற்றும் ரஜினி
அதாவது வீட்டிலேயே ஹோம் தியேட்டரில் படம் பார்ப்பதால் தலைவருக்கு டிக்கெட், ஸ்நாக்ஸ், பார்க்கிங் கட்டணம் மிச்சம். படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரை அழைத்து தனக்கு ஒரு கதை ரெடி பண்ண சொல்லுவார். அதன் பிறகு கதையை இன்னும் டெவலப் பண்ணுங்க என்று கூறுவார்.
அதற்குள் அந்த இயக்குனர் அவுட்டே ஆகி புதிய இயக்குனர் வந்துவிடுவார். அவரிடம் ஒரு கதையை ரஜினி தயார் செய்ய சொல்லுவார். இப்படியே ரிப்பீட் ஆகி கொண்டு இருக்கும். இதற்கு உதாரணமாக பல இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, லவ் டுடே படத்தின் பிரதீப் ரங்கநாதன் என லிஸ்ட் பெரிசாக இருக்கிறது. இவ்வாறு இயக்குனர்களுக்கு ஆசை காட்டிய பிறகு தலைவர் மோசம் செய்வதாக ப்ளூ சட்டை மாறன் பதிவு போட்டிருக்கிறார்.
