கூலி, ஜெயிலர் 2-வில் ரஜினி சம்பளம்.. வாரி இறைக்கும் சன் பிக்சர்ஸ்

Rajini : சன் பிக்சர்ஸ் தொடர்ந்து ரஜினியின் படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தான் கூலி. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

75 வயதாகும் ரஜினி இப்போதும் கதாநாயகனாக படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது சம்பளம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவை பொருத்தவரையில் விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருந்தார்.

இப்போது அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினியும் சம்பளம் வாங்கும் நிலையில், கூலி படத்தில் அவரது சம்பளம் 230 கோடியாகும். இதைத்தொடர்ந்து நெல்சன் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தை எடுத்து வருகிறார்.

கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் ரஜினியின் சம்பளம்

இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்து வருகிறது. ஜெயிலர் முதல் பாகம் வெளியாகி பெரும் லாபத்தை கலாநிதி மாறனுக்கு கொடுத்திருந்தது. இயக்குனர் நெல்சன், ரஜினி மற்றும் அனிருத் ஆகியோருக்கு காரை பரிசாக வழங்கியிருந்தார்.

இப்போது ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் சம்பளம் 260 கோடி என்று கூறப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பல மடங்கு ரஜினியின் சம்பளம் கூடிக் கொண்டே போகிறது. மேலும் ஜெயிலர் 2 -வுக்கு பிறகு ரஜினி படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் சமீபத்தில் ரஜினியின் மனைவி லதா செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது தொடர்ந்து ரஜினி நடிப்பார் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.