விஜயகாந்துக்கே அப்பன் நான்.. ஜெயலலிதா முன் சொடுக்கு போட்டு பேசிய ரஜினியின் தைரியம்

Actor Rajini: விஜயகாந்த் எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று தைரியமாக பேசக்கூடியவர். அதிலும் அரசியல் களம் கண்ட பிறகு அவர் ஜெயலலிதா முன்னரே நாக்கை துருத்திக் கொண்டு பேசிய சம்பவங்களும் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் உனக்கே நான் அப்பன் என்று சொல்லும் வகையில் ரஜினி அந்த காலத்திலேயே அப்படி ஒரு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கிறார்.

இது இப்போது இருக்கும் 2K கிட்ஸ்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டே அவரை விரல் நீட்டி சொடுக்கு போட்டு விமர்சித்த ரஜினியின் தைரியம் அப்போது பல நாளிதழ்களில் ஆச்சரியத்துடன் பேசப்பட்டது. அதாவது 1995 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் அவருடைய தலைமையில் செவாலியே விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் ரஜினி, கமல், சிரஞ்சீவி, மம்மூட்டி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது அந்த விருது சிவாஜிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. நன்றாக சென்று கொண்டிருந்த அந்த விழாவின் முடிவுரையின் போது ரஜினியை பேச அழைத்தனர். சாதாரணமாக அதை கவனித்துக் கொண்டு வந்த பலரும் புருவம் உயர்த்தும் அளவுக்கு காரசாரமாக இருந்தது சூப்பர் ஸ்டாரின் பேச்சு.

அதாவது விழா மேடைக்கு ஜெயலலிதா வரும்போதே ரஜினி மரியாதை நிமித்தமாக வணக்கம் கூட வைக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார். அதுவே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் மேடையில் அவர் ஜெயலலிதாவை சொடுக்கிட்டு நான் ரொம்பவும் டென்ஷனாக இருக்கிறேன், நீங்கள் ஃபிலிம் சிட்டியை திறந்து வைத்த போது சிவாஜியை கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் நீங்கள் அவரை மதிக்கவில்லை, அந்த விழா மேடையில் அவரை உட்கார வைத்து பெருமைப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தவறு செய்வது இயல்புதான், அதை திருத்திக் கொள்வது பெரிய குணம். அப்போ செய்த தவறை இப்ப நீங்க சரி செஞ்சுட்டீங்க என்று படபடவென புரிந்து தள்ளிவிட்டார்.

இதை அங்கு இருந்தவர்கள் யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு ஏன் பலரையும் கண் பார்வையிலேயே அடக்கி வைக்கும் சிங்கம் பெண்மணியே ஒரு நிமிடம் ஜெர்க் ஆகிப்போனது உண்மை தான். அந்த அளவுக்கு ரஜினியால் மேடையே அனல் தெறித்தது. அதன் பிறகு இந்த சம்பவம் பல நாட்களுக்கு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இவ்வாறு பல சமயங்களில் ரஜினி தன் தைரியத்தை வெளிப்படுத்தி நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.