ராஜ்கிரனை நம்பி மோசம் போன ராமராஜன்.. கூடவே இருந்து குழி பறித்த பரிதாபம்

ராமராஜன் படங்கள் என்றாலே குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியான கதையும் அவருடைய படங்களில் காதல், பாட்டு என்று முக்கியத்துவம் கொடுத்து வருவதிலும் இவரை அடிச்சுக்கிறதுக்கு நிகர் யாருமில்லை. அப்படிப்பட்ட இவரை எப்படியாவது நம் கதையில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசையுடன் சுற்றித்திரிந்து இருக்கிறார் ஒரு இயக்குனர். அப்பொழுது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததால் ராமராஜன் இடம் கதை சொல்லி இருக்கிறார்.

அவரும் இந்த கதையை கேட்டு ரொம்பவே அசந்து போய் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். பிறகு ராமராஜன், இயக்குனரிடம் இப்படத்திற்கு தயாரிப்பாளராக ராஜ்கிரண் என்ற டிஸ்ட்ரிபியூட்டரை போய் சந்தியுங்கள். அவரிடம் நான் சொன்னதாக கதையை கூறுங்கள் என்று ராஜ்கிரனிடம் அனுப்பி வைத்திருக்கிறார். உடனே இயக்குனர், ராஜ்கிரனிடம் கதையை சொல்லி இருக்கிறார்.

அவருக்கு கதையை கேட்டு ரொம்பவே பிடித்து போய் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அத்துடன் ஒரு கண்டிஷனையும் இயக்குனருக்கு போட்டிருக்கிறார். அதாவது என்னவென்றால் அந்தக் கதையை வைத்து ராமராஜனுக்கு படம் பண்ண வேண்டாம். அதற்குப் பதிலாக நான் கதாநாயகனாக நடிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். இதை கேட்ட அந்த இயக்குனர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்.

ஏனென்றால் அவர் இயக்குனராக அடியெடுத்து வைக்கும் முதல் படம் இதுதான். அதனால் என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்த பொழுது ராஜ்கிரண் இந்த படத்தில் நான் கதாநாயகனாக நடித்தால் மட்டும்தான் இப்படத்தை தயாரிப்பேன் என்று அவரை கொஞ்சம் பிளாக்மெயில் செய்திருக்கிறார். உடனே இயக்குனர் நம்முடைய முதல் பட வாய்ப்பு அதனால் அதனை இழக்க வேண்டாம் என்று ராஜ்கிரன் சொன்னதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

இதற்கு இடையில் ராமராஜனும் ராஜ்கிரனும் நல்ல நெருங்கிய வட்டாரத்தில் தோழராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் அந்த நம்பிக்கையில் ராமராஜன், இயக்குனரிடம் நான் சொன்னேன் சொல்லி கதை சொல்லு அவர் தயாரிப்பார் என்று நம்பி இருந்திருக்கிறார். ஆனால் இப்படி கூடவே இருந்து குழி பறித்து விட்டார். இது தெரியாமல் ராமராஜன் அந்த இயக்குனர் வருவார் என்று ரொம்ப நம்பிக்கையில் காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் கடைசிவரை அந்த இயக்குனர் இவரை தேடி வரவே இல்லை. அதன் பிறகு தான் இவருக்கு தெரிந்தது இயக்குனர் ராஜ்கிரனை வைத்து படம் எடுத்து விட்டார் என்று. அப்படி வந்த படம் தான் என் ராசாவின் மனசிலே. அந்த இயக்குனர் தான் கஸ்தூரிராஜா. இவர் இயக்குனராக அறிமுகம் ஆகிய முதல் படமும். இதனைத் தொடர்ந்து ராஜ்கிரண் நல்ல பரிச்சியமான நடிகராக மாறி வெற்றி பெற்று விட்டார். ஆனால் ராமராஜனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய் - கடந்த 13 வருடங்களாக தமிழ் சினிமா செய்திகளை ரசிகர்களுக்கு கொண்டு சென்று வருகிறார். Google News approved publisher, 1.3 மில்லியன் YouTube subscribers, 1.3 மில்லியன் Facebook subscribers,1.4 லட்சம் Instagram followers உடன் தமிழ் சினிமா உலகில் நம்பகமான தகவல் ஆதாரமாக விளங்கி வருகிறார்.

View all posts →