ஸ்ரீகாந்த்க்கு பின் கூண்டோடு மாட்டிய விஜய் சேதுபதி.. 2 லட்சம் வரை ஆஃபர், வெட்ட வெளிச்சமாக்கிய ரம்யா

Vijay Sethupathi : சமீபகாலமாக சினிமாவில் திடுக்கிடும் செய்திகள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருகிறது. கேரளாவில் ஹேமா கமிட்டி மூலம் பல நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. அதுவும் பெரிய நடிகர்கள் அதில் சிக்கி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து சமீபத்தில் போ**தை பொருள் உபயோகப்படுத்தியதாக ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சூழலில் விஜய் சேதுபதி மீது விழுந்திருக்கும் குற்றச்சாட்டு தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறது.

சமீபத்தில் தான் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படம் வெளியாகி தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரம்யா மோகன் என்ற பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதாக பதிவிட்டு இருக்கிறார்.

விஜய் சேதுபதி மீது குற்றம்சாட்டிய ரம்யா மோகன்

அதாவது கேரவனுக்கு அவரை அழைத்துச் செல்ல இரண்டு லட்சம் விஜய் சேதுபதி கொடுத்திருக்கிறார். எனக்கு பரிச்சயமான அந்த பெண் மிகவும் பாதிக்கப்பட்டு இப்போது மறுவாழ்வு மையத்தில் இருக்கிறார் என்று ரம்யா மோகன் பதிவு போட்டிருக்கிறார்.

ஆனால் அந்த பதிவை சில மணி நேரங்களில் நீக்கிவிட்டார். விஜய் சேதுபதி இதுகுறித்து விளக்கம் கொடுப்பாரா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென்று விஜய் சேதுபதி மீது இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் ஒரு சாதாரண பெண் இவ்வளவு பெரிய நடிகர் மீது குற்றச்சாட்டு வைப்பது அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக கூட இருக்கலாம். இதுவரை விஜய் சேதுபதி மீது இதுபோன்ற எந்த குற்றச்சாட்டுகளும் வந்ததில்லை. அடித்தளத்தில் இருந்து இவ்வளவு பெரிய உயரத்திற்கு வருவது சாதாரணமில்லை. ஒரே ஒரு ட்விட் மூலம், 199 பேக் போட்டு அவரது கேரியரை மொத்தமாக காலி செய்ய ஏற்பட்ட சதி வலையாக கூட இருக்கலாம்.

vijay-sethupathi
vijay-sethupathi

ஏனென்றால் முறையான ஆதாரங்கள் இல்லாமல் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தனது அக்கவுண்டையே டிஆக்டிவேட் செய்து விட்டார். துணிச்சல் இல்லாத அந்தப் பெண்மணி ஏன் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் பதிவு போட வேண்டும் என்ற விமர்சனங்கள் வருகிறது. மேலும் சினிமாவில் உள்ள போட்டி காரணமாக கூட விஜய் சேதுபதியின் மார்க்கெட்டை உடைக்க கூட இவ்வாறு நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.