Ravi Mohan : வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணம் இன்று நடக்கிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு உள்ளனர். ஆனால் இதில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால் ரவி மோகன் கெனிஷா உடன் பங்கு பெற்றிருக்கிறார்.
அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரவி மோகன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தார். குடும்பத்தின் நலன் கருதி இந்த விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக ரவி கூறியிருந்தார்.
இதில் பெரும்பாலானோர் ஆர்த்தி மீது தவறி இருப்பதாக கூறி வந்தனர். அதன் பிறகு பாப் பாடகி ஜெனிஷா பிரான்சிஸ் உடன் ரவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தது. கோவாவில் ஒரு காரில் கெனிஷா மற்றும் ரவி மோகன் சென்ற போது அபராதம் கட்டியதாக தகவல் வெளியானது.
ஐசாரி வீட்டு கல்யாணத்தில் ரவி மோகன் மற்றும் ஜெனிஷா

இந்த செய்தி அறிந்து ஆர்த்தி கோவா சென்றபோது கெனிஷா அனுமதிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து நேரடியாகவே செய்தியாளர் சந்திப்பில் ரவி மோகன் பேசி இருந்தார்.
அதாவது என்னுடைய வாழ்க்கையில் அவரைப் பற்றி தவறாக பேச வேண்டாம் என்று ஜெயம் ரவி கேட்டுக் கொண்டிருந்தார். இப்போது ஐசரி வீட்டு கல்யாணத்தில் ஒரே நிற உடையில் கெனிஷா மற்றும் ஜெயம் ரவி கலந்து கொண்டுள்ளனர்.
அதுவும் ஒரே இருக்கையில் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்கள். ஆகையால் ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் விவாகரத்திற்கு ஜெனிஷா தான் காரணம் என்ற சந்தேகம் மேலும் எழுந்துள்ளது.