வாங்கிய காசுக்காக உயிரை கொடுத்த மணிரத்னம்.. பொன்னியின் செல்வனை உதயநிதிக்கு கொடுக்காததன் பின்னணியில் இருக்கும் விஷயம்

தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. பல ஜாம்பவான்களும் முயற்சி செய்த இந்த நாவல் மணிரத்தினத்தால் திரைப்படமாக மாறி இருக்கிறது.

அந்த வகையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைவருக்கும் அதிகமாக இருக்கிறது. ஒருவகையில் இந்த முயற்சி மணிரத்தினத்தின் பல வருட கனவாகும். அந்த கனவை நினைவாக்குவதற்காக அவர் உயிரைக் கொடுத்து வேலை செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட பிரம்மாண்டமான காவியத்தை திரைப்படமாக கொண்டு வருவது அவ்வளவு எளிது கிடையாது. அதை நன்றாக புரிந்து கொண்ட மணிரத்னம் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். அந்த வகையில் இப்படத்தை மணிரத்னம் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

அதில் லைக்கா ப்ரொடக்ஷன் படம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பே 225 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகு படம் ஆரம்பிக்கப்பட்டு அதன் பட்ஜெட் 500 கோடி ரூபாய் வரை சென்றிருக்கிறது. இந்நிலையில் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் பட வெளியிட்டு உரிமையை உதயநிதியிடம் கொடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம்.

சமீப காலமாக உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் மெகா பட்ஜெட் திரைப்படங்களை வெளியிடும் உரிமையை கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் அவர்தான் வாங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் மணிரத்தினத்தின் இந்த முடிவு தற்போது பலரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.

பொதுவாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒரு படத்தை வாங்கும்போது பணம் கொடுத்து வாங்க மாட்டார்கள். படம் வெளியாகி வரும் லாபத்தில் 15 சதவீத தொகையை எடுத்துக்கொண்டு மீதியை தயாரிப்பாளர்களிடம் கொடுத்து விடுவார்கள். இதனால்தான் மணிரத்தினம் உதயநிதியிடம் வெளியீட்டு உரிமையை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஏனென்றால் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் 700 கோடி வரை லாபம் பார்க்கும் என்பதுதான் மணிரத்தினத்தின் கணக்கு. ஆனால் படம் வெளியான பிறகு நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால் தான் அவர் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதாக தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.