5 சேனலில் குடியரசு தின சிறப்பு படங்கள்.. டிஆர்பி-யை ஏற்ற சன் டிவிக்கு டஃப் கொடுக்கும் ஜீ தமிழ்

பண்டிகை காலங்களில் திரையரங்குகளை காட்டிலும் தொலைக்காட்சிகளில் சமீபத்தில் வெளியான படங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புவார்கள். அந்த வகையில் நாளை குடியரசு தின விழாவை முன்னிட்டு ஐந்து தொலைக்காட்சிகளில் என்ன படம் ஒளிபரப்பாகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

சன் டிவி : சன் நெட்வொர்க் குடியரசு தின விழாவை முன்னிட்டு சுதா கொங்குரா இயக்கத்தில் வெளியாகி ஐந்த தேசிய விருதுகளை வென்ற சூரரைப்போற்று படத்தை ஒளிபரப்பு செய்கிறது. மேலும் கௌதம் கார்த்திக், மஞ்சுமா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியான தேவராட்டம் படமும் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

கே டிவி : சன் நெட்வொர்க்கை தொலைக்காட்சியான கே டிவியில் அதுல்யா, சுனைனா, யோகி பாபு மற்றும் பல நடிப்பில் காமெடியாக வெளியான திரைப்படம் ஒளிபரப்பு செய்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான எந்திரன் படமும் ஒளிபரப்பாகிறது.

ஜீ தமிழ் : சன் டிவிகே டஃப் கொடுக்கும் வகையில் ஜீ தமிழ் கடந்த ஆண்டு வெளியான படத்தை இறக்கி உள்ளது. அதாவது அதர்வா, அருண் பாண்டியன், தனியார் ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ட்ரிகர் படம் ஒளிபரப்பு செய்கிறது. மேலும் ஜீ தமிழில் அதிக முறை போடப்பட்ட மன்னர் வகையறா படமும் ஒளிபரப்பாகிறது.

கலைஞர் டிவி : கலைஞர் தொலைக்காட்சியிலும் கடந்த ஆண்டு அருள்நிதி, பவித்ரா மாரிமுத்து மற்றும் பலர் நடிப்பில் வெளியான டைரி படம் ஒளிபரப்பாகிறது. இந்த படத்தின் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் கலைஞர் தொலைக்காட்சியின் டிஆர்பி சற்று ஏற வாய்ப்பு இருக்கிறது.

ஜெயா டிவி : ஜெயா டிவியில் பண்டிகை காலங்களில் பெரிய அளவில் புது படங்கள் எதுவும் வெளியாகாது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில் வெளியான இறைவி படத்தை ஒளிபரப்பு செய்கிறது. ஏற்கனவே இந்த தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.