வெறுக்கப்பட வேண்டிய கேரக்டருக்கு கிடைத்த மரியாதை.. மாரி செல்வராஜ் போட்ட மட்டமான கணக்கு

Mari Selvaraj: கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியாக்களில் மாரி செல்வராஜ் பயங்கர ரோஸ்ட் ஆகிக் கொண்டிருக்கிறார். இவரின் இயக்கத்தில் உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் மாமன்னன் படம் வெளியானது.

ரிலீசுக்கு முன்பு இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களையே சந்தித்தது. அதனால் வசூலுக்கு ஒன்றும் பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோன்று தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் மாமன்னன் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Also read: வாய்ப்பு தராமல் விரட்டி விட்ட வடிவேலு.. வெட்ட வெளிச்சமாக்கிய நடிகைக்கு வந்த மிரட்டல்

இதற்கு முக்கிய காரணம் ரத்னவேலு கேரக்டரில் நடித்திருந்த பகத் பாசில் தான். ஆளுமை அராஜகம் செய்யும் கொடூரமான வில்லனாக வரும் இந்த கேரக்டர் இறுதியில் தோற்றுப் போய்விடும். ஆனால் இந்த தோற்றுப் போன கதாபாத்திரம் தான் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் மாமன்னன் படத்தில் மாரி செல்வராஜ் ஒரு இன மக்கள் ஆதிக்க வர்க்கத்தினரால் எப்படி பாதிக்கப்படுகின்றனர், அதை எதிர்த்து எப்படி முன்னேறுகின்றனர் என்பதை தெளிவாக காட்டி இருப்பார். ஆனால் இப்போது உதயநிதி, வடிவேலு கேரக்டரை மக்கள் மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Also read: உதயநிதி, மாரி செல்வராஜ் எல்லாம் ஒன்றுமே இல்லை.. கொடி பறக்க செய்து ருத்ர தாண்டவம் ஆடிய வசூல் வேட்டை

ஏனென்றால் மாரி செல்வராஜ் எந்த கேரக்டர் வெறுக்கப்பட வேண்டும் என்று நினைத்தாரோ அது சமூகத்தால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு இன மக்களும் வீரமான பாட்டை போட்டு இந்த கேரக்டரை ஹீரோவாக மாற்றி சோசியல் மீடியாவில் உலாவ விட்டு வருகின்றனர்.

இது எந்த மாதிரியான சிந்தனை என்று தெரியவில்லை. சினிமா விமர்சகர்கள் கூட இது குறித்து ஆதங்கத்தோடு வெளிப்படுத்தி வருகின்றனர். ஆக மொத்தத்தில் மாரி செல்வராஜ் போட்ட கணக்கு மட்டமான கணக்கு என அவர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.

Also read: சக்திவேலா, ரத்னவேலா.? சாதிய வெறியை தூண்டிய மாரி செல்வராஜ், மாமன்னன் பற்ற வைத்த நெருப்பு