Surya : தனது அப்பா பெயரை பயன்படுத்தாமல் தன்னுடைய பாணியில் நடித்து, சினிமாவில் உச்சகட்டத்தை தொட்டிருக்கும் நடிகர் சூர்யா. இவரின் அமைதியான குணத்திற்கே ரசிகர்கள் அதிகம். சூர்யாவின் எத்தனை படங்கள் தோல்வியடைந்தாலும் ரசிகர்கள் இவரை விட்டு பின்வாங்குவதில்லை.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு மனிதனாக உணர்ந்து அகரம் பவுண்டேஷன் மூலம் பல ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி வருகிறார். இன்றைய தலைமுறையினருக்கு சூர்யாவின் இந்த செயல் ஊக்கம் கொடுக்கும் செயலாக பார்க்கப்படுகிறது.
பல வருட போராட்டம்..
வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக அறியப்பட்டவர் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் சில துணை நடிகர் கதாபாத்திரத்திலும் பிரசதி பெற்றார். இவரது நகைச்சுவையான பேச்சுக்கே பல ரசிகர்கள் கூடிவிட்டனர்.
துணை நடிகராக இருந்து சினிமாவில் ஒரு பிரபலமான சூர்யாவை வைத்து, படத்தை இயக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் பாலாஜி. பல கஷ்டங்களுக்கு பிறகு சூர்யாவின் 45 வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு கருப்பு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
“ஒரு சூர்யா படத்தோட இயக்குனர் இதைக் கேட்கும் போதே நல்லா இருக்கிறது” என்று ஆர்.ஜே பாலாஜி மேடையில் பேசியதும், சூர்யா ரசிகர்கள் பயங்கரமான கைதட்டல்களை கொடுத்தனர். சூர்யாவின் இந்த கருப்பு திரைப்படம் எப்போது ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சின்ன வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இன்று ஒரு திரைப்படத்தையே இயக்கும் அளவுக்கு ஆர் ஜே பாலாஜி உயர்ந்திருப்பது, வரவேற்கக் கூடிய விஷயம். சினிமா வட்டாரத்தில் இப்போது வரைக்கும் இவருக்கு பாராட்டும் மழை குவிந்து வருகிறது.