Actor Robo shankar: நடிகர் ரோபோ சங்கர் ஐந்து மாத காலமாக உடல்நிலை குறைவால் ரொம்பவே அவதிப்பட்டு வந்தார். இதனால் இவருடைய தோற்றம் சற்று மாறுபட்ட நிலையில் இருந்ததால் பல சர்ச்சைகளில் இவருடைய பெயர் அடிபட்டு வந்தது. அதற்கு என்ன காரணம் என்று இவருடைய மனைவி பத்திரிகையாளர்களிடம் தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தார்.
தற்போது அதிலிருந்து ரோபோ சங்கர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த நிலையில், தான் பட்ட கஷ்டம் மற்றவர்கள் யாரும் படக்கூடாது என்ற எண்ணத்தில் மீடியா முன் எல்லா உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். அதாவது எந்த ஒரு விஷயமும் தனக்கு வந்தால் தான் காய்ச்சலும் தலைவலியும் தெரியும் என்பது போல பட்ட பின்பு தான் இவருக்கு புத்தி தெரிந்திருக்கிறது.
அதனுடைய தாக்கம் தான் தற்போது இவர் மீடியாவில் அனைவருக்கும் அட்வைஸ் கொடுக்கும் விதமாக இவருடைய உண்மையான சம்பவத்தை கூறி வருகிறார். அதாவது இவர் கூறியது போதை என்பது தவறான ஒரு பாதை. அதற்கு முன் உதாரணமாக உங்கள் அனைவரது முன்னாடியும் நான் அவஸ்தைப்பட்டு அதிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கிறேன்.
சமீபத்தில் அனைவரும் என்னைப் பற்றியான விஷயங்களை யூடியூப் மூலமாக தெரிந்திருப்பீர்கள். எனக்கு மஞ்சள் காமாலை வந்ததால் படாத பாடு பட்டிருக்கிறேன். அதற்கு காரணம் சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள் என்னிடம் இருந்ததால் இந்த நிலைமையை நான் அனுபவித்து இருக்கிறேன்.
ஆறு மாதமாக சாவின் விளிம்பு வரை சென்று அதனுடைய கஷ்டங்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்று பார்த்து இருக்கிறேன். அதனால் எல்லா கெட்ட பழக்கங்களையும் தற்போது அறவே விட்டுவிட்டு நல்ல உணவு பழக்க வழக்கங்களை பின்பற்றி, முறையான உடற்பயிற்சி மற்றும் நல்ல நண்பர்களை என் அருகில் வைத்துக் கொண்டு என் உடம்பை தேற்றி இருக்கிறேன்.
அத்துடன் எப்பொழுதும் சிரித்துக் கொண்டு சந்தோசமாக இருங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனக்கு பின் ஒரு குடும்பம் நம்மை நம்பி இருக்கிறது என்று நினைத்தால் இந்த போதை பழக்கத்திலிருந்து ஈசியாக வெளிவந்து விடலாம். அதனால் தயவு செய்து கெட்ட பழக்கத்திற்கு ஆளாக வேண்டாம். என்னுடைய நிலைமையை பார்த்த பின்பாவது எல்லோரும் நல்வழியை பின்பற்றுங்கள் என்று அறிவுரை கொடுத்திருக்கிறார்.