1. Home
  2. கோலிவுட்

6 கோடி சம்பளம்.. 33 வயதில் சாய்பல்லவியின் சொத்து மதிப்பு

6 கோடி சம்பளம்.. 33 வயதில் சாய்பல்லவியின் சொத்து மதிப்பு

Sai Pallavi Net worth : சின்னத்திரையில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலம் பங்கு பெற்று இப்போது பிரபல நடிகையாக வலம் வருகிறார் சாய் பல்லவி. தன்னுடைய இயல்பான நடிப்பால் மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்.

பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அவ்வாறு சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி, ஷாம் சிங்கா ராய், கார்கி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு அமரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இதை அடுத்து இப்போது இராமாயணா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவியின் சொத்து மதிப்பு

சாய் பல்லவி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சூழலில் அவரது சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட ஆறு கோடி வரை சம்பளம் பெற்று வருகிறாராம்.

மேலும் அவரது சொத்து மதிப்பு 50 கோடி உள்ளதாம். சின்னத்திரையில் இருந்து வந்தாலும் மேக்கப் போடாமல், பாரம்பரிய முறையில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வருகிறார். இதுவும் இவரது வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

தொடர்ந்து சாய் பல்லவிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி வருகிறார். மேலும் இன்று சாய் பல்லவியின் பிறந்தநாளில் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.