1. Home
  2. கோலிவுட்

விவாகரத்துக்கு பின் நிஜ வாழ்க்கையில் 2 குழந்தைக்கு தாயாகும் சமந்தா.! வெறுத்துபோய் எடுத்த முடிவு

விவாகரத்துக்கு பின் நிஜ வாழ்க்கையில் 2 குழந்தைக்கு தாயாகும் சமந்தா.! வெறுத்துபோய் எடுத்த முடிவு
விவாகரத்துக்கு பின் சமந்தா இரண்டு குழந்தைக்கு தாயாகும் சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

After Divorce Samantha with two children in real life: எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும் நடிகையான சமந்தா சொந்த வாழ்க்கையில் ஏராளமான போராட்டங்களை சந்தித்துள்ளார். நீண்டகால காதலுக்கு பின்  நாக சைதன்யாவை திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் விரைவில் விவாகரத்தும் பெற்றுள்ளார்.

மயோடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட இவர் தற்போது பூடான் சென்று ஆயுர்வேத மருத்துவத்தை மேற்கொண்டு வருகிறார். சினிமாவுக்குள் புகுந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் சில படங்களில் மட்டுமே கமிட் ஆகி வரும் சமந்தா அண்மையில் குஷி படத்தை நிறைவு செய்திருந்தார்.

சினிமாவை தாண்டி பல துறைகளிலும் கால் பதித்த சமந்தா அவர்கள், சமூக சேவையிலும் தான் சளைத்தவர் அல்ல என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார். பலவகையிலும் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.

நாக சைதன்யா உடன் சேர்ந்து வாழ்வது அல்லது மறுமணம் செய்வது என்ற உறவினர்களின் கேள்விக்கு மறுப்பு சொன்னதுடன் மறுமணம் செய்யப்போவதில்லை என பகிரங்கமாக அறிவித்தார் சமந்தா. இவர் வாழ்க்கை மற்ற நடிகைகளுக்கு பெரும் பாடமாக இருந்து வருகிறது.

வலிக்கு தீர்வு வலி அன்று! வலி நிவாரணியே தேவை! என்று உணர்ந்த சமந்தா தற்போது  இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுக்க போவதாகவும் அவர்களுக்காகவே தனது வாழ்க்கையை வாழப் போவதாகவும் நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். சமந்தாவின் வலிக்கு நிவாரணம் கிடைக்கட்டும்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.