1. Home
  2. கோலிவுட்

சிம்புவுடன் மல்லுக்கட்டிய சந்தானம்.. படம் ட்ராப்பாக இதுதான் காரணமா?

சிம்புவுடன் மல்லுக்கட்டிய சந்தானம்.. படம் ட்ராப்பாக இதுதான் காரணமா?

Santhanam : சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த சிம்பு ரசிகர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தை கொடுத்தது. இதை அடுத்து சிம்புவின் பிறந்தநாள் அன்று ராம்குமார் பாலகிருஷ்ணன் படத்தில் நடிக்க உள்ளதாக ஒப்பந்தமானார்.

இந்த சூழலில் சில வருடங்களாகவே கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதுவும் சிம்பு அழைத்ததால் தான் மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதாக சந்தானம் கூறியிருந்தார்.

ஆனால் இந்த படம் இப்போது டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது தயாரிப்பாளர் இப்போதுஅமலாக்கத் துறையினரால் ரைடு நடத்தப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இருப்பதாக ஒரு தரப்பு கூறி வருகின்றனர்.

சந்தானம், சிம்பு படம் ட்ராப்பானதற்கு காரணம்

மற்றொருபுறம் இதுவரை கதாநாயகனாக சந்தானம் நடித்து வந்ததால் இந்த படத்திலும் ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவம் கேட்டதாக சொல்லப்படுகிறது. வெறும் காமெடிக்கு மட்டும் என்னால் நடிக்க முடியாது என்று படக்குழு தரப்பில் கூறியுள்ளார்.

இதனால் சிம்பு மற்றும் சந்தானம் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்போது சிம்பு வெற்றிமாறனுடன் கூட்டணி போட்டு இருக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கிவிட்டது. இதுதவிர தேசிங்கு பெரியசாமி, மணிரத்னம் போன்ற இயக்குனர்களின் படங்களில் அடுத்தடுத்து சிம்பு நடிக்கும் உள்ளார். சந்தானமும் அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.