1. Home
  2. கோலிவுட்

மாரடைப்பால் உயிர் நீத்த மாயி பட இயக்குனர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த திரையுலகம்

மாரடைப்பால் உயிர் நீத்த மாயி பட இயக்குனர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த திரையுலகம்

Maayi Director Passed Away: சமீப காலமாக திரையுலகில் அடுத்தடுத்து மரணச் செய்திகளை கேட்டு வருகிறோம். அதில் தற்போது பிரபல இயக்குனர் ஒருவர் உயிர் இழந்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மாணிக்கம் படம் மூலம் அறிமுகமானவர் தான் இயக்குனர் சூர்ய பிரகாஷ் என்கிற கே.வி பாண்டியன். அதை அடுத்து இவர் சரத்குமாரின் திவான், மாயி ஜீவன் நடித்த அதிபர் ஆகிய படங்களை இயக்கியிருந்தார்.

அதேபோல் தெலுங்கில் பாரத் சிம்ஹா ரெட்டி என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இப்படி பரவலாக அறியப்பட்ட இயக்குனர் சூரிய பிரகாஷ் மாரடைப்பின் காரணமாக இன்று உயிர் நீத்துள்ளார்.

அவருக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் தற்போது தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சரத்குமார் நீண்ட பதிவு ஒன்றை போட்டு தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார்.

மாயி பட இயக்குனர் மரணம்

அதில் அவர் என்னுடைய நண்பர் சூரிய பிரகாஷ் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி எனக்கு வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

மாரடைப்பால் உயிர் நீத்த மாயி பட இயக்குனர்.. காரணத்தை கேட்டு அதிர்ந்த திரையுலகம்
sarathkumar

நேற்றைய தினம் அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் இந்த எதிர்பாராத மறைவு துயரத்தை கொடுக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார். சமீப காலமாக பல பிரபலங்கள் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அதில் சூரிய பிரகாஷின் மறைவும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.