ஹீரோக்களுக்கு நச்சுனு குட்டு வைத்த சசிகுமார்.. வசூல் வடைக்கு சொன்ன ஐடியா

சசிகுமார் பற்றி பேட்ட படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை சொல்லி இருப்பார்.. சசி மிகவும் நல்ல மனிதர் தங்கமான குணம் இருக்கு என்று புகழ்ந்து இருபபார்.. அதற்கு தகுந்தாற்போல் இருந்தது சசிகுமார் பேச்சி.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றிவிழாவில் சசிகுமார் பேசிய வார்த்தைகள் தமிழ் சினிமா வசூல் வடைகளுக்கு சுர்ர்ன்னு இருக்கும். மேலும் கண்டிப்பாக அடுத்த படத்திற்கு சம்பளம்லாம் ஏற்ற மாட்டேன் என்றும் கூறினார்.

சசிகுமார் சொல்லும் ஐடியா

தயாரிப்பாளர்கள் உண்மையான வசூலை நடிகர்களுக்கு சொன்னால்தான் அவர்களும் சம்பளத்தை ஏற்றாமல் இருப்பார்கள். தனக்கு முதல் நாளில் 2 கோடி வரை மார்க்கெட்தான் இருக்கு என்பதே இப்பொழுதுதான் தெரியும். அதனால் இனிமேல் சம்பளத்தை ஏற்றுவதற்கு பதிலாக நல்ல படங்களை தேர்வு செய்து நடிப்பதுதான் சிறந்தது என்று கூறினார்.

500 கோடி, 1000 கோடிலாம் சொன்னால் நம்ம ஹீரோக்களும் வாவ் அப்படியே நமக்கு 250 கோடி தட்டி விடுங்க என்று தனது மேனேஜரை வைத்து பேரம் பேசுவார்கள். தயாரிப்பாளர்களும் வேறு வழி  இல்லாமல் மாட்டி கொள்வார்கள்.

இந்த வசூல் கணக்கு ரஜினி, அஜித், விஜய், சூர்யா யாராக இருந்தாலும் சசிகுமார் சொன்னது பொருந்தும். ரசிகர்களை மார்க்கெட்டிங் டூல் மாதிரி பயன்படுத்துவதை விட்டுட்டு நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கலாம்.

ஏற்கனவே ஹெச் வினோத், லோகேஷ் போன்றவர்கள் இந்த வசூல் வடை பற்றி ஏற்கனவே பேசிவிட்டார்கள். தற்பொழுது சசிகுமார் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசியது சற்று ஆறுதல்.